கிருட்டினகிரி, மே 9- கிருட்டினகிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, எம்.ஆர்.ஆர்.சி. ஆகிய அமைப்புகளின் கலந்துரையாடல் கூட்டம் போச்சம்பள்ளி யில் 3.-5.2022 அன்று மாலை 5 மணி அளவில் பகுத் தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் க.வெங்கடேசன் தலைமையில் நடை பெற்றது.
இக்கூட்டம். மாவட்ட கழகத் தலை வர் த. அறிவரசன், செயலாளர் கா. மாணிக்கம், மாவட்ட துணைத் தலை வர் வ. ஆறுமுகம், பருகூர் ஒன்றிய செய லாளர், ப. பிரதாப் ஆகியோர் முன்னி லையில் நடைபெற்றது.
மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர் கிருஷ்ணன் அனைவரை யும் வரவேற்று பேசினார். மாநில பகுத் தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா சரவணன் தொடக்க உரை யாற்றினார். தருமபுரி மண்டல ஆசிரி யர் அணி அமைப்பாளர் இர. கிருஷ்ண மூர்த்தி கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து உரையாற்றினார்.
மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, பகுத்தறிவு எழுத் தாளர் மன்ற மாநில துணைத் தலைவர் கவிதா, மண்டல மகளிரணி செயலாளர் மு. இந்திரா காந்தி மற்றும் கழகத் தோழர்களின் உரைக்குப் பின் மாநில அமைப்பு செயலாளர் ஊமை.ஜெய ராமன் சிறப்புரையாற்றினார்.
மாநில இளைஞரணி கலந்துரை யாடல் கூட்டத்தில் புதிய பொறுப்பா ளர்கள் அறிவிக்கப்பட்டனர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் மண்டல இளைஞரணி செயலாளராக அறிவிக் கப்பட்ட மு.சிலம்பரசன், மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளராக அறிவிக்கப் பட்ட மணிமொழி, பகுத்தறிவு எழுத் தாளர் மன்ற மாநில துணைத் தலைவர் கவிதா, புதிதாக அறிவிக்கப்பட்ட ப.க மாவட்ட தலைவர் க. வெங்கடேசன் ஆகியோருக்கு மாநில அமைப்பு செய லாளர் ஊமை.ஜெயராமன் சால்வை அணி வித்து சிறப்பித்தார்
கூட்டத்தில் பங்கேற்றோர்
கூட்டத்தில் பொதுக்குழு உறுப் பினர் ஜான்சிராணி, மகளிர் அணி பொறுப்பாளர்கள் முருகம்மாள், சுதா, கலைவாணி ராஜேஸ்வரி, மேனாள் ராணுவ வீரர் ரகுநாதன், ஆசிரியர்கள் அருண்குமார், வஜ்ரவேல், ராஜா மற் றும் கழகத் தோழர்கள் கலந்து கொண் டனர் இறுதியாக எம் ஆர் ஆர் சி மாவட்ட தலைவர் இரா. பழனி அவர் கள் நன்றி கூறினார்
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
தீர்மானம் 1. வருகின்ற ஜூன் மாதம் 19ஆம் தேதி செஞ்சியில் நடைபெறும் பகுத்தறிவாளர் கழக பொன்விழா மாநாட்டிற்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் அதிகப்படியான நிதியை திரட்டி தருவது என தீர் மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 2 பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணிக்கு அதிகப்படி யான உறுப்பினர்களை சேர்ப்பது என தீர்மானிக்கப்படுகிறது
தீர்மானம் 3. செஞ்சியில் நடை பெறும் பகுத்தறிவாளர் கழக பொன் விழா மாநாட்டிற்கு மாவட்டம் முழு வதும் சுவரெழுத்து பிரச்சாரப் பணியை மேற்கொள்வது என தீர்மானிக்கப்படு கிறது.
தீர்மானம் 4. ஒவ்வொரு மாதமும் மூன்றாவது சனிக்கிழமை மாலையில் தொடர்ந்து கருத்தரங்கம் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது
தீர்மானம் 5: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 60ஆம் ஆண்டு விடுதலை ஆசிரியர் பணியை பாராட்டி மாவட்ட கழகத்தின் சார்பில் 1000 விடுதலை சந்தாக்கள் அளிப்பது என தீர்மானிக்கப்படுகிறது
தீர்மானம் 6: செஞ்சியில் நடை பெறும் ப.க பொன்விழா மாநாட்டிற்கு மத்தூரில் ஒரு பேருந்தும், போச்சம்பள் ளியில் ஒரு பேருந்தும் கிருட்டினகிரியில் இருந்து ஒரு பேருந்திலும் செல்வது என தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 7: கிருட்டினகிரி நகரில் நடைபெற்று வரும் பெரியார் மய்யம் கட்டுமான பணிகளுக்கு அதிகப்படி யான நிதியை திரட்டி தந்து ஒத்துழைப்பு நல்குவதுஎன தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 8: கீழ்க்கண்ட தோழர்கள் புதிய பொறுப்பாளர்களாக அறிவிக்கப் படுகிறார்கள்.
மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் .
மாவட்ட தலைவர் :க.வெங்கடேசன்
செயலாளர்: இரா.பழனி
அமைப்பாளர்: ச.கிருஷ்ணன்
துணைத் தலைவர்: ஜெயகுமார்
துணைச் செயலாளர் சித.அருள்
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
தலைவர்: இரா. பழனி
செயலாளர்:ப. இளையராஜா
அமைப்பாளர்:கவிஞர் ஜெயச்சந்திரன்
மாடர்ன் ரேஷனலிஸ்ட்
மாவட்ட தலைவர் ச.ஜோதிமணி
செயலாளர் ச. ஜோதிபாசு
ஆகியோர் புதிய பொறுப்பாளர் களாக நியமிக்கப்பட்டனர்.

No comments:
Post a Comment