இலங்கையில் இருந்து தமிழ்நாடு செல்வோரைக் கண்டறிந்து விசாரணை இலங்கை அரசு புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 9, 2022

இலங்கையில் இருந்து தமிழ்நாடு செல்வோரைக் கண்டறிந்து விசாரணை இலங்கை அரசு புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை

கொழும்பு, மே 9- இலங்கை கடற்பரப்பின் வழியாக இந்தியாவுக்குள் அத்து மீறி நுழைவதை தடுக்க குற்றப்புலனாய்வுத் துறையின் மூன்று குழுக் களை இலங்கை வடமா காணத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு அனுப்பி யுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திரு கோணமலை, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இருந்து சட்டவிரோத மாக கடல் மார்க்கமாக இந்தியாவுக்குத் தப்பிச் செல்வோரை விசாரணை யில் ஈடுபடுத் தப்படவுள் ளதாக குற்றப் புலனாய் வுப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன

அதேநேரம் மனித கடத்தல் புலனாய்வுப் பிரிவு மற்றும் கடல்சார் குற்றப்பிரிவு ஆகியவற் றின் குழுக்கள் இதற்காக களமிறக்கப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்பட்டுள் ளது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இதுவரையில் சுமார் 80 பேர் சட்ட விரோதமான கடல் வழி களில் இந்தியாவிற்கு தப் பிச் சென்றுள்ளதாக தக வல் வெளியாகியுள்ளன.


No comments:

Post a Comment