மதுரை, மே 9- ஒன்றிய அரசு இன்னும் ரூ.28 ஆயிரம் கோடி நிதி தர வேண்டும். அதை இன்னும் தரவில்லை என வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி கூறினார். மதுரை ஆட்சி யர் அலுவலகத்தில், வணி கவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி அளித்த பேட்டி:
கடந்த அதிமுக ஆட் சியில் பத்தாண்டு காலம் செய்ய முடியாததை, ஓராண்டு காலத்தில் செய் துள்ளோம். எந்தெந்த வகையில் இடையூறு செய்தாலும், அதையெல் லாம் முறியடித்து தான் ஓராண்டு காலத்தில் முதலமைச்சர் பணி செய் துள்ளார். ஒன்றிய அரசு கொடுக்க வேண்டிய மின் பகிர்வை கொடுக்கவில்லை. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் விவசாயிக ளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்பு கொடுத்துள் ளோம்.
தமிழ்நாடு வணிக வரித்துறையின் முழுமை யான வரி வருவாயை ஒன்றிய அரசு திருப்பிக் கொடுத்தாலே தமிழ்நாடு அரசு மேலும் பல சேவை களை மக்களுக்கு செய்ய முடியும். தமிழ்நாடு பணத்தை பெற்றுக் கொண்டு, ஒன்றிய அரசு அதை திருப்பிக் கொடுக் காமல், இதை செய்வோம், அதை செய்வோம் என சொல்வது வெறும் பேச்சு மட்டுமே. ஒன்றிய அரசு இன்னும் ரூ.28 ஆயிரம் கோடி தரவேண்டும். அந்த நிதியை ஒன்றிய அரசு தரவில்லை. அவர் களின் பேச்சு கதைக்கு உதவாது. கடந்த பத் தாண்டுகளில் ரூ.6 லட்சம் கோடியை கடன் வைத்து விட்டு அதிமுகவினர் சென்றுள்ளனர். அதற்கு நாங்கள் வட்டியும், கட னும் கட்டிக் கொண்டுள் ளோம். இவ்வாறு தெரிவித்தார்.

No comments:
Post a Comment