சென்னை, மே 10- இணையதள குற்ற புகார்களின் எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டு 13,707 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் 1,648 சதவீதம் அதிகமாகியுள்ளது என்று காவல்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்றும், இன்றும் (9, 10.5.2022)காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றன.
சட்டப்பேரவையில், காவல்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் சைபர் (இணையதள) குற்ற காவல் நிலையங்கள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:
டிஜிட்டல் மயமாக்கல், இணைய வசதிகள் மற்றும் கைப்பேசிகளின் பர வலான பயன்பாடு, இணையதள குற் றங்கள் வேகமாக அதிகரிக்கக் காரண மாக உள்ளது.
2011 ஆம் ஆண்டு இணையதள குற்ற புகார்களின் எண்ணிக்கை 748-ஆக இருந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு 13,707 ஆக அதி கரித்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் 1,648 சதவீதம் அதிகமாகியுள்ளது.
பெரும்பாலான இணையதள குற்ற வழக்குகளில் வெளிநாட்டினர் ஈடு படுவதால், குற்றவாளிகளை கைது செய் தல் மற்றும் களவு போன சொத்துக்களை மீட்டெடுத்தல் மிகப்பெரும் சவாலாக உள்ளது.
வங்கிக் கணக்குகள் முடக்கப்பட் டாலும், சட்ட சிக்கல்கள் மற்றும் இதர நடைமுறைகள் காரணமாக, புகார் தாரருக்கு பணத்தைத் திரும்ப வழங் குவது காலதாமதத்தை ஏற்படுத்துகிறது.
இப்பிரச்சினையை எதிர்கொள்ள சென்னை மாநகரில் கூடுதலாக அதா வது 4 மண்டலங்களுக்கு தலா ஒன்றும், மத்திய குற்றப்பிரிவிற்கு ஒன்றும் என 5 இணையதள குற்ற காவல் நிலையங்கள் மறுபரவலாக்கும்முறை மூலம் ரூ.85.69 லட்சம் செலவில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு அரசு இதற்கான ஆணை வெளி யிட்டுள்ளது.
புலன் விசாரணையை அறிவியல் முறையில் மேம்படுத்த இணைய தள தடயவியல் ஆய்வகம் அமைத்து அதில் உயர் தொழில்நுட்ப தடயவியல் கருவிகள், மென்பொருட்கள், சமூக வலைதள உள்ளீட்டுக் கருவிகள் அமைக்க ரூ.6.9 கோடி செலவில் ‘‘பாதுகாப்பான நகர’’ திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் மட் டுமே இணையதள குற்றத்தால் பாதிக் கப்பட்ட பொது மக்களுக்கு அவர்கள் இழந்த பணம் ரூ.6.75 கோடி காவல் துறையின் தீவிர நடவடிக்கையால் மீட்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment