100 நாள் வேலை திட்டம் தொழிலாளர்கள் வருகையை தேசிய செல்லிட கண்காணிப்பு அமைப்பு செயலி மூலம் பதிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 29, 2022

100 நாள் வேலை திட்டம் தொழிலாளர்கள் வருகையை தேசிய செல்லிட கண்காணிப்பு அமைப்பு செயலி மூலம் பதிவு

  வேலூர், மே 29 100 நாள் வேலை திட்ட தொழிலாளர் களின் வருகை தேசிய செல்லிட கண்காணிப்பு அமைப்பு செயலி மூலம் பதிவு செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

வேலூர் மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங் களுக்கு உட்பட்ட 247 கிராம ஊராட்சிகளில் 421 தொகுப்புகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 100 நாட்கள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 2,16,349 குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டு, 1,44,141 தொழிலாளர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். 

இந்த திட்டத்தில் அனைத்து தொகுப்புகளிலும் 20 மற்றும் அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்யும் பணித்தளங்களில் தொழிலாளர்களின் வருகை பதிவானது கடந்த 21ஆம் தேதி முதல் தினமும் 2 வேளை தேசிய செல்லிட கண்காணிப்பு அமைப்பு செயலி வழியாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு, ஒளிப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. 

தற்போது தொழிலாளர்களின் வருகை பதிவானது தேசிய செல்லிட கண்காணிப்பு அமைப்பு செயலி வழியாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

அதனால் கைமுறை வருகைப்பதிவு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள தொழிலாளர்கள் அனைவரும் உரிய நேரத்துக்கு பணித்தளங்களுக்கு வருகை புரிய வேண்டும். தினசரி வருகைப்பதிவானது காலை, மாலை வேளைகளில் தேசிய செல்லிட கண்காணிப்பு அமைப்பு செயலி வழியாக மட்டுமே மேற்கொள்ளப்படும். 

மேலும் இந்த வருகை பதிவின் அடிப்படையில் தான் ஊதியம் வழங்கப்படும். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment