நிறுவனங்கள் முன்பதிவு செய்ய வேண்டுகோள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 29, 2022

நிறுவனங்கள் முன்பதிவு செய்ய வேண்டுகோள்

அரியலூர், மே 29 நிறுவனங்கள் முன்பதிவு செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மய்யம் இணைந்து மாவட்ட அளவிலான மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமினை நடத்தவுள்ளது. 

முகாமில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தனியார் துறை வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்யும் பொருட்டு இம்முகாமில் பங்கேற்பதற்கு ஏதுவாக அடுத்த மாதம்(ஜூன்) 10ஆம் தேதிக்குள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். 

இந்த தகவல் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment