பூம்புகாரில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்படும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 11, 2022

பூம்புகாரில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்படும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

சென்னை, மே 11 மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சந்திரபாடி மீனவ கிராமத்தில், ரூ.10 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷணன் சட்டப்பேரவையில் கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (10.5.2022) கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். அப்போது பூம்புகார் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம்.முருகன், "சந்திரபாடி மீனவ கிராமத்தில் மீன்பிடி இறங்குதளம் அமைத்துத் தரப்படுமா?" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், "மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சந்திரபாடி மீனவ கிராமத்தில், 26 விசை படகுகளும், 274 நாட்டுப் படகுகளும் உள்ளன. இங்குள்ள மீனவர்கள், மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக நிறுத்திடவும், மீன்களை சுகாதாரமான முறையில் கையாளவும் போதுமான வசதிகள் இல்லாத காரணத்தால், பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

எனவே மீனவர்களின் சிரமங்களை களைந்திடும் வகையில், சந்திரபாடி கிராமத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில், படகு அணையும் சுவர், மீன்வலை ஏலக்கூடம், வலை பின்னும் கூடம் ஆகிய வசதிகளுடன் கூடிய மீன் இறங்குதளம் அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் சுமார் 550 மீனவக் குடும்பங்கள் பயன்பெறுவதோடு, அவர்கள் பிடிக்கும் மீன்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார்.

 பொருளாதாரத்தை பலவீனப்படுத்தி விடும்

இந்த சூழலில் பண வீக்கத்தை கட்டுப்படுத்தவும், மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கவும், குறு சிறு தொழில்களின் எதிர்காலம் உறுதி செய்யப்படவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

குறு சிறு தொழில்களுக்கு சலுகை வட்டியில் கடன் அளித்திடுவதையும், குறு சிறு தொழில்களுக்கான கடன் இலக்குகளை வங்கிகள் நிறைவு செய்வதையும், ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கான செலவினங்களை நகரம் கிராமம் இரண்டிலும் உயர்த்தவும், மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்ட ஒதுக்கீடுகளை அதிகரிக்கவும் திட்டவட்டமான முடிவுகளை எடுக்குமாறும் வேண்டுகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment