புதுடில்லி, மே 11- ரயில்களில் கைக்குழந்தைகளுடன் பயணம் செய்யும் பெண்களின் வசதிக்காக தாயுடன் சேயும் சேர்ந்து படுத்துச்செல்லும் வசதி ரயில்வேத்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பன்னாட்டு அன் னையர் நாளான 8.5.2022 அன்று புதிய படுக்கை வசதிகள் தொடங்கப்பட்டன. அதில் குழந்தைக்கான படுக்கையை பயன்படுத்தியபின்னர் மடித்து வைக்கலாம். மேலும் பயணத்தின்போது படுக்கையிலுள்ள குழந்தை விழாத வகையில் தடுக்கின்ற பெல்ட் அமைப்பும் இணைக்கப் பட்டுள்ளது.
குழந்தைகளைப் பாதுகாக்க படுக்கையுடன் உள்ள பெல்ட்டுகளை எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதை விளக்கும் காட்சிப் பதிவினை ரயில்வேத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
ரயில்வே துறை இந்த படுக்கை வசதிகளை பரிசோதித்து வருகிறது, அவை குறிப்பிட்ட ரயில்களில் மட்டுமே கிடைக்கும்.
குழந்தை படுக்கைகளை அறிமுகப்படுத்துவது வடக்கு ரயில்வேயின் லக்னோ மற்றும் டில்லி பிரிவுகளின் கூட்டு முயற்சியாகும்.
ரயில்வே வாரிய கூட்டத்தின் போது பொறியாளர் ஒருவர் இந்த தொழில்நுட்பத்தை தெரிவித்தார் என்று லக்னோ கோட்ட ரயில்வே மேலாளர் சுரேஷ் குமார் சப்ரா தெரிவித்துள்ளார்.
ரயில்வே வாரியத்தின் மறுஆய்வுக் கூட்டத்தில், மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பொறியாளர் நிதின் தியோரின் குழந்தைகளுக்கான படுக்கை வசதி குறித்து கூறினார். இது தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் பயணம் செய்யும்போது அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும். இந்த திட்டத்துக்கு குழந்தை படுக்கை வடிவத் தில் செயல்வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார்.
பயணிகளிடம் இதற்கு வரவேற்பு இருந்தால் ரயில்வே அனைத்து ரயில்களிலும் குழந்தை படுக்கை வசதிகளை வழங்கும் என்று சப்ரா மேலும் கூறினார்.
கோவில் திருவிழாவுக்குச் சென்ற பெண் காணவில்லை
வில்லியனூர், மே11- புதுச்சேரியிலுள்ள அரும்பார்த்த புரத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது35). இவரது மனைவி பாஞ்சாலி (25). இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. கணவன்-மனைவி இருவரும், புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். வில்லி யனூரில் உள்ள கோவில் திருவிழாவுக்கு சென்ற பாஞ்சாலி வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் 10ஆம் வகுப்பு வினாத்தாள் கசிவு எதிரொலி
மேனாள் அமைச்சர் கைது
அய்தராபாத், மே 11- ஆந்திர மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி முதல் மே மாதம் 7ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு தேர்வு நடைபெற்றது. அப்போது தினமும் வினாத்தாள்கள் கசிந்து பரபரப்பை உண்டாக்கின. இது தொடர்பாக 25 அரசு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் நாரா யணாவுக்கு இதில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப் பட்டது. இவருக்கு சொந்தமாக ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் நூற்றுக்கணக்கான தனியார் பள்ளிகள் உள்ளன. எனவே, பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று பெற்றோர்களையும், மாணவர்களையும் கவரவே இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டார் என முதலமைச்சர் ஜெகன்மோகன் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், நாராயணா கல்வி நிறுவனத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான நாராயணாவை, ஆந்திர உளவுப்பிரிவு காவல்துறையினர் அய்தராபாத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து சந்திரபாபு நாயுடு கூறும்போது, “இது அரசியல் பழிவாங்கும் செயல். நாராயணாவுக்குச் சொந்தமான கல்வி நிறுவனத்தில் வினாத்தாள் வெளி யானதால் அவரை கைது செய்தோம் என காவல்துறையினர் கூறுகின்றனர். அப்படியானால், பல அரசு பள்ளி களில் கூட வினாத்தாள்கள் கசிந்தன. ஆதலால், முதல மைச்சர் ஜெகன்மோகன் மற்றும் கல்வித்துறை அமைச்சர் சத்திய நாராயணா ஆகியோரையும் கைது செய்ய வேண்டும்'' என்றார்.

No comments:
Post a Comment