16 பணிமனை பேருந்து நிலையங்களை நவீனப்படுத்த நடவடிக்கை : அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 10, 2022

16 பணிமனை பேருந்து நிலையங்களை நவீனப்படுத்த நடவடிக்கை : அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல்

 சென்னை, மே 10 வடபழனி உள்ளிட்ட 16 பணிமனை பேருந்து நிலையங்களை நவீனப்படுத்த சாத் தியக்கூறு அறிக்கை தயாரிக்கப் பட்டு வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று (9.5.2022) கேள்வி நேரத்தின் போது, விருகம்பாக்கம் உறுப்பினர் பிரபாகர்ராஜா, வடபழனி மற்றும் கலைஞர் நகர் பேருந்து நிலைய பணிமனையை நவீனப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்பினார். அப் போது பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவ சங்கர், ``வடபழனி உள்ளிட்ட 16 பணிமனை பேருந்து நிலையங் களை நவீனப்படுத்த தமிழ்நாடு உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதியு தவியில், தமிழ்நாடு உட்கட்ட மைப்பு நிதி மேலாண்மை ஒருங் கிணைப்புக் குழுவுடன் விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக் கப்பட்டு வருகிறது.

அறிக்கை கிடைத்ததும் முதல மைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக் கப்படும். பேருந்து நிலையங்கள் நவீனப் படுத்தப்படும் போது வணிக வளாகங்களும் அமைக் கப்படும். கலைஞர் நகர் பணிமனையை பொறுத்தவரை, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அந்த இடத்தில் நில அளவியல் பணிகள் நடைபெற்று வருகின்றன. நவீ னப்படுத்துவதற்கான சாத்தி யக்கூறு குறித்த இடைக்கால அறிக்கை கடந்தாண்டு அக் டோபரம் மாதம் சமர்ப்பிக்கப் பட்டு, ஒப்புதல் கிடைக்கப்பட் டுள்ளது விரைவில் நவீனப்படுத் தப்படும்'' என்றார்.


No comments:

Post a Comment