அண்ணா பொறியியல் கலந்தாய்வு -10 இடங்களில் நடத்த ஆலோசனை அமைச்சர் க.பொன்முடி தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 10, 2022

அண்ணா பொறியியல் கலந்தாய்வு -10 இடங்களில் நடத்த ஆலோசனை அமைச்சர் க.பொன்முடி தகவல்

சென்னை, மே 10 அண்ணா பல்கலைக்கழகத்தில் கலந்தாய்வு நடத்தாமல் பொறியியல் கல்லூரி களில் மாணவர்களை நேரடியாக அழைத்து தேர்ந்தெடுக்க முடியுமா என்ற ஆலோசனை நடத்தி வருவ தாக உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கூறினார்.

சட்டப் பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி: அமைச்சர் பதில் சொல்லும்போது பல்வேறு அரசு கலைக் கல்லூரிகளிலே காலியிடங்கள் அதிக அளவிலே இருக் கின்றன என்று சொன்னார். அப்படி தமிழ்நாட்டிலே இருக் கின்ற அத்தனை அரசு கலைக் கல்லூரிகளில் உள்ள காலியிடங் களுக்காக தனியாக கலந்தாய்வு நடத்தி, அதிலே மாணவர்களை சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் படுமா. ஏனென்றால், பல்வேறு மாணவர்களுக்கு இடம் கிடைக்க வில்லை என்று சொல்லக்கூடிய நிலை இருக்கிறது.

அமைச்சர் க.பொன்முடி: அரசு கல்லூரிகளில் கலந்தாய்வு என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் கிடையாது. கலந்தாய்வு என்றால் உடனே இணையத்தில் நடத்தலாம் என்று சொல்வார்கள். சென்ற ஆண்டு அண்ணா பல்க லைக்கழகத்தில் இணைய வழிப் பதிவில் எவ்வளவு குளறுபடிகள் இருந்தது என்பதை நாம் பார்த் தோம். எனவே, அதை பற்றியெல் லாம் நாங்கள் பரிசீலித்துக் கொண் டிருக்கிறோம். ஆகவே, அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் சேருகின்ற மாண வர்களுக்கு 10 இடத்தில் வைத்து, நேர்முகமாக அவர்களை தேர்ந் தெடுக்க முடியுமா என்ற ஆலோ சனைகளையெல்லாம் இந்த அரசு செய்து கொண்டிருக்கிறது. எனவே, கலந்தாய்வு வேண்டாம். எங்கெங்கு இடம் இருக்கின்றதோ, அந்தந்த கல்லூரிகளில் அவர்கள் சேர்வதற்கு நாம் நேரம் தருகிறோம். அந்த தேதிக்குள் அவர்கள் சேர வில்லையென்று சொன்னாலும், அதற்கு பிறகும் விண்ணப்பித்து சேரலாம். ஆக, விண்ணப்பிக்காத மாணவர்கள்கூட அரசு கல்லூரி களில் சேர்வதற்கான வாய்ப்புகளை கொடுத்திருக்கிறோம். ஆகவே, கலந்தாய்வு தேவையில்லை. இவ் வாறு விவாதம் நடந்தது. விண்ணப் பிக்காத மாணவர்கள்கூட அரசு கல்லூரிகளில் சேர்வதற்கான வாய்ப் புகளை கொடுத்திருக்கிறோம்.

No comments:

Post a Comment