அசானி புயல் இன்றிரவு கரையை கடக்கும் வானிலை ஆய்வு மய்யம் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 10, 2022

அசானி புயல் இன்றிரவு கரையை கடக்கும் வானிலை ஆய்வு மய்யம் தகவல்

டில்லி மே 10 தீவிர புயலாக இருக்கும் அசானி புயல் இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழந்த புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மய்யம் கூறியுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த வார இறுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானது. அது மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று முன்தினம் (8.5.2022)  காலை குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு அசானி புயல் என பெயரிடப்பட்டது.

அசானி புயல் காரணமாக தமிழ்நாட்டில் 33 மாவட்டங் களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. புதுவை காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மய்யம் தெரிவித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவா ரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், புதுக் கோட்டை, கள்ளக்குறிச்சி, கரூர், சேலம், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் வேலூர், ராணிப்பேட்டை, திரு வண்ணாமலை, திருப்பூர், தேனி, மதுரை, சிவகங்கை, விருது நகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை ஆகிய 33 மாவட்டங் களில் மழை பெய்ய கூடும் என வானிலை மய்யம் கூறி யுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி பகுதியில் இருந்து 590 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள அசானி புயல் இன்று இரவு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா கடற்கரையை ஒட்டி மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.  

No comments:

Post a Comment