பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 11, 2022

பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது

சென்னை, மே 11 10, 12ஆம் வகுப்பை தொடர்ந்து பிளஸ்-1 வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நேற்று  (10.5.2022) தொடங்கியது.

கரோனா தொற்று காரணமாக நடப்பு கல்வியாண்டுக் கான பொதுத்தேர்வுகள் சற்று தாமதமாக தொடங்கி நடைபெறுகின்றன. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 5ஆம் தேதியும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 6ஆம் தேதியும் தேர்வு தொடங்கியுள்ளன.

அதனைத் தொடர்ந்து பிளஸ்-1 வகுப்பு மாணவர் களுக்கு நேற்று பொதுத்தேர்வு தொடங்கி இருக்கிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3 ஆயிரத்து 119 தேர்வு மய்யங்களில் 8 லட்சத்து 85 ஆயிரத்து 53 பேர் தேர்வை எழுதுகின்றனர். இவர்களில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 4 லட்சத்து 26 ஆயிரத்து 917 மாணவர்கள், 4 லட்சத்து 42 ஆயிரத்து 989 மாணவிகள், 2 திருநங்கைகள் என மொத்தம் 8 லட்சத்து 69 ஆயிரத்து 908 பேர் தேர்வை எதிர்கொள்கின்றனர்.

ஆர்வத்துடன் எழுதினர்

பிளஸ்-1 வகுப்புக்கான தமிழ் தேர்வு நேற்று நடந்தது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை போலவே, பிளஸ்-1 பொதுத்தேர்வும் 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடக்கிறது. அந்த வகையில் கரோனா தொற்று பரவத் தொடங்கிய காலத்தில் 9ஆம் வகுப்பு படித்தவர்கள், இப்போது பிளஸ்-1 பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாமலேயே, நேரடி யாக பிளஸ்-1 வகுப்பு பொதுத்தேர்வை இந்த மாணவ-மாணவிகள் எதிர்கொள்கின்றனர். 

43 ஆயிரம் பேர் தேர்வு எழுத வரவில்லை

பிளஸ்-1 பொதுத்தேர்வு முதல் நாளில் தமிழ் தேர்வு நடந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 85 ஆயிரத்து 53 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத இருந்தனர். இவர்களில் 43 ஆயிரத்து 533 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை என்று அரசு தேர்வுத்துறை வெளியிட்டு இருக்கிறது. ஏற்கெனவே 12ஆம் வகுப்பு முதல் நாள் தேர்வில் 32 ஆயிரம் பேரும், 10ஆம் வகுப்பு முதல் நாள் தேர்வில் 42 ஆயிரம் பேரும் தேர்வுக்கு வராமல் இருந்தனர்.

தற்போது 11ஆம் வகுப்பு முதல் நாள் தேர்வில் 43 ஆயிரத்து 533 பேர் தேர்வு எழுதாதது கல்வியாளர்கள், ஆசிரியர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. என்ன காரணத்துக்காக தேர்வு எழுத மாணவர்கள் வரவில்லை என்பது குறித்து கல்வித்துறை ஆய்வு நடத்த இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment