சென்னை,மே 11- சட்டமன்றப் பேரவையில் நேற்று (10.5.2022) கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் தாயகம் கவி, திரு.வி.க. நகர் தொகுதியில் மருத்துவமனை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பதிலுரையில், புதிதாக நகர்புறங்களில் 708 மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் சமீபத்தில் பேரவை விதி 110கீழ் அறிவித்தார். அதன்படி சென்னையில் ஒவ்வொறு வார்டுக்கு ஒரு மருத்துவமனை என்ற அடிப்படையில் 200 மருத்துவமனைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பெரிய மருத்துவமனைக்கு மக்கள் அதிக அளவில் வருவதை தவிர்க்க முடியும் என்று விளக்கம் அளித்தார்.
மேலும், மருத்துவத்துறையில் காலியாக உள்ள 4000 பணியிடங்களை நிரப்பும் பணிகள் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி.) மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

No comments:
Post a Comment