தனியார் சுயநிதி பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டில் சேர்க்கை குலுக்கல் முறையில் 30ஆம் தேதி மாணவர்கள் தேர்வு சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 29, 2022

தனியார் சுயநிதி பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டில் சேர்க்கை குலுக்கல் முறையில் 30ஆம் தேதி மாணவர்கள் தேர்வு சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்

சென்னை, மே 29  தனியார் சுயநிதி பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை தொடர்பாக வருகிற 30ஆம் தேதி குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு நடைபெறும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ்.அமிர்த ஜோதி வெளியிட்ட அறிவிப்பு:சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 2022- - 2023ஆம் கல்வியாண்டில் குழந்தை களுக்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மற்றும் தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதி களின்படி வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினர் குழந்தைகளுக்கு குறைந்த பட்சம் 25% ஒதுக்கீட்டின்படி, நுழைவு நிலை வகுப்பில் (எல்கேஜி) சேர்க்கை வேண்டி கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் கடந்த 25ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பங்களை பெற்றோர்கள் பதிவேற்றம் செய்த னர். இதன் அடிப்படையில், தகுதி யான இடங்களை விட அதிகமாக விண்ணப்பங்கள் பதிவு செய்யப் பட்ட பள்ளிகளில் வருகிற 30ஆம் தேதி குலுக்கல் நடைபெற உள்ளது. பள்ளியில் தகுதியான இடங்களை விட அதிகமாக பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப் பங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில்  அப்பள்ளிக்கு சேர்க்கை வேண்டி விண்ணப்பித்த பெற்றோர்களின் முன்னிலையில் குலுக்கல் முறையில் மாணவர்களை தேர்ந்தெடுத்து சேர்க்கை வழங்கிடும் பொருட்டு சார்ந்த பள்ளிகளில் வருகிற 30ஆம் தேதி காலை 10 மணிக்கு குலுக்கல் நடைபெற உள்ளது. 

பள்ளி பொதுத் தேர்வு மய்யங் களாக செயல்படும் பள்ளிகளில் பிற்பகல் 3 மணிக்கு குலுக்கல் நடை பெற உள்ளது. 

ஆகவே, பெற் றோர்கள் தாங்கள் விண்ணப்பித்த பள்ளிக்கு வருகிற 30ஆம் தேதி வருகை புரிந்து குலுக் கலில் கலந்து கொண்டு, பள்ளி

களில் குழந்தைகள் சேர்க்கைக்கான தேர்வு வெளிப் படையாக நடை பெறுவதை உறுதி செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment