குடும்ப நல ஆய்வறிக்கையில் தகவல்!
புதுடில்லி, மே 8- இந்தியாவில் 18 முதல் 29 வயது வரையிலான பெண்களில் 25 விழுக் காட்டினர் சட்டப்பூர்வ வயதை எட்டுமுன்னே திருமணம் செய்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. நாடு முழுவதும் 707 மாவட்டங் களில் 6.37 லட்சம் குடும்பத்தினரிடம் தேசிய குடும்ப நலத்துறை சார்பில் பல்வேறு அம்சங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொள் ளப்பட்டது. கடந்த 2019-2021 ஆம் ஆண்டு களில் நடத்தப்பட்ட இந்த 5 ஆவது ஆய்வு தொடர்பான அறிக்கை வெளியிடப்பட் டுள்ளது.
இதில் முக்கியமாக, சட்டப்பூர்வ வயதை எட்டுவதற்கு முன் திருமணம் செய்தவர்கள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 18-29 வயதுடைய பெண்களில் 25 விழுக் காட்டினரும், 21-29 வயதுடைய ஆண்களில் 15 விழுக்காட்டினரும் முன்கூட்டியே திரு மணம் செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
பெண்களில் அதிகபட்சமாக மேற்கு வங்காளத்தில் 42 விழுக்காட்டினரும், பீகாரில் 40 விழுக்காட்டினரும் முன்கூட்டியே திரு மணம் செய்துள்ளனர்.
ஆண்களைப் பொறுத்தவரை பீகாரில் அதிகபட்சமாக 25 விழுக்காட்டினரும், குஜராத், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிர தேசத்தில் தலா 24 விழுக்காட்டினரும் முன் கூட்டியே திருமணம் செய்து கொண்டிருப்ப தாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் லட்சத்தீவு, சண்டிகர் மற்றும் கேரளா தலா ஒரு விழுக்காட்டுடன் கடைசி இடத்திலும், புதுச்சேரி, தமிழ்நாடு, நாகாலாந்து ஆகியவை தலா 4 விழுக் காட்டுடன் அதற்கு முந்தைய இடத்திலும் உள்ளன. எனினும் நாடு முழுவதும் இந்த முன்கூட்டிய திருமணங்கள் படிப்படியாகக் குறைந்து வருவதாகவும் அறிக்கையில் சுட் டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெண்களின் திருமண வயது 18 ஆகவும், ஆண்களின் திருமண வயது 21 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது பெண்களின் திருமண வயதையும் 21 ஆக உயர்த்த பரிசீலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மது அருந்துவோர்
இதைப்போல மது அருந்துவோர் தொடர் பாக நடத்தப்பட்ட ஆய்வில் நாடு முழுவதும் 22 விழுக்காடு ஆண்கள் மது அருந்துவதாக தெரியவந்துள்ளது. இவர்களில் 15 விழுக் காட்டினர் நாள்தோறும் என்ற வகையிலும், 43 விழுக்காட்டினர் வாரத்துக்கு ஒருமுறையும் மது அருந்துகிறார்கள்.
இதைப்போல ஒரு விழுக்காடு பெண் களும் மது அருந்துவது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அவர்களில் 17 விழுக்காடு பேர் தினமும் அருந்துவதாகவும், 37 விழுக்காட்டி னர் வாரத்துக்கு ஒரு முறை குடிப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. மது அருந் தும் பெண்களில் அதிகபட்சமாக அருணாசல பிரதேசத்தில் 15 விழுக்காட்டினரும், சிக்கிமில் 15 விழுக்காட்டினரும் உள்ளனர்.
ஆண்களில் கோவா (59 விழுக்காடு), அருணாசல பிரதேசம் (57 விழுக்காடு, மற்றும் தெலங்கானா (50 விழுக்காடு) மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. இதைத்தவிர 15 முதல் 49 வயது வரையிலான ஆண்களில் 39 விழுக்காட்டினரும், பெண்களில் 4 விழுக் காட்டினரும் புகையிலை பொருட்களைப் பயன்படுத்துவதாக தெரியவந்து உள்ளது.
ஆண்கள் பயன்படுத்தும் புகையிலை பொருட்களை பொறுத்தவரை பெரும்பாலும் பான் மசாலா அல்லது குட்காவே (15 விழுக்காடு) உள்ளன. அடுத்ததாக சிகரெட் (13 விழுக்காடு) அதிக பயன்பாட்டில் உள்ளது. பெண்களைப் பொறுத்தவரை அதிகமாக பான் மசாலா அல்லது குட்காவும், அடுத்ததாக புகையிலையுடன் பான் மசாலாவும் பயன் படுத்துவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது
No comments:
Post a Comment