தேமுதிக தண்ணீர் பந்தலுக்குத் தீ
சென்னை கோயம்பேடு பகுதியில் தேமுதிக அலுவலக வாயிலில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலுக்குச் சென்னை வேளச்சேரியை சேர்ந்த வாடகைக் கார் ஓட்டுநர் ராமு என்பவர் தீ வைத்தார். அவரை காவல்துறையினர் கைது செய்தபோது, தண்ணீர் பந்தலில் தண்ணீர் இல்லை என்பதற்காகத் தீ வைத்ததாகக் கூறினார்.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5,531 கன அடியிலிருந்து 6,318 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 106.38 அடியிலிருந்து 106.66 அடியாக உயர்ந்துள்ளது. குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
மாணவர்கள் அச்சமின்றி தேர்வு எழுத வரவேண்டும்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
மாணவர்கள் அச்சமின்றித் தேர்வு எழுத வரவேண்டும்; மதிப்பெண் மட்டுமே தங்களின் திறமையைத் தீர்மானிக்காது என்று தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
No comments:
Post a Comment