மும்பை, மே 8- கோடை வெயிலால் நாடு முழு வதும் மின்சார தேவை அதிகரித்து வரு கிறது. அதேநேரத்தில் தேவைப்படுகின்ற அளவுக்கு மின்சார உற்பத்தி செய்வதற்கான நிலக் கரியோ பற்றாக்குறையாக உள்ளது.
உக்ரைன் போரால் இறக்குமதி பாதிக்கப் பட்டதாலும், உள்நாட்டில் உற்பத்தி செய் யப்படும் நிலக்கரியும் அனல் மின் நிலையங் களுக்கு கொண்டு சேர்க்க போதுமான ரயில் பெட்டிகள் இல்லாததாலும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
எனவே பெருகி வரும் நிலக்கரி தேவையை சமாளிக்க, ஏற்கெனவே மூடப் பட்டிருந்த அல்லது உற்பத்தி நிறுத்தப் பட்டிருந்த நிலக்கரி சுரங்கங்களை மீண்டும் திறக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நிலக்கரி இந்தியா லிமிடெட் நிறு வனத்துக்குச் சொந்தமான 20 சுரங்கங்களை முதற்கட்டமாக வருவாய் பகிர்வு அடிப் படையில் தனியார் மூலம் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் நிலக்கரி நடைமுறையில் உள்ள விலையின் அடிப் படையில் சந்தையில் தனியார் மூலம் விற் பனை செய்யப்படும். இந்த வருவாயில் ஒரு பகுதி, நிலக்கரி இந்தியா நிறுவனத்துக்கு கிடைக்கும்.
மூடப்பட்ட நிலக்கரிச் சுரங்கங்களின் திறப்பு விழா மும்பையில் நேற்றுமுன்தினம் (6.5.2022) நடைபெற்றது.
ஒன்றிய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கலந்து கொண்டு சுரங் கங்களை திறந்து வைத்தார்.
பின்னர் அவர் பேசும்போது கூறிய தாவது:-
மின்சார தேவை அதிகரிக்கும் நிலையில், இதற்காக நிலக்கரி தேவையும் அதிகரித்து உள்ளது. நிலக்கரி உற்பத்தியில் தற்சார்பு நிலையை அடையவும், இறக்குமதியை குறைக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இணைய தனியார் துறைகளை கேட்டுக் கொள்கிறேன்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் பிரதமர் மோடி நிர்ணயித்த இலக்கை எட்டியுள்ள போதும் நாட்டிற்கு இன்னும் நிலக்கரி மற்றும் நிலக்கரி வாயுவாக்கம் தேவைப்படுகிறது. அது அவசியமும் ஆகும். இந்த சுரங்கங்களில் உயர்தர இருப்புக்கள் உள்ளன. ஆனால் பொதுத்துறை நிறுவன பயன்பாடுகளின் பல் வேறு கட்டுப்பாடுகள் காரணமாக மூடப்பட்ட அல்லது நிறுத்தப்பட்ட இந்த சுரங்கங்களுக்கு புத்துயிர் அளிக்க முடியவில்லை.
இந்த 20 சுரங்கங்களில் பிரித் தெடுக்கக்கூடிய இருப்புக்கள் சுமார் 38 கோடி டன் உள்ளன. அதில் 10 முதல் 15 சதவிகிதம் வரை பிரித்தெடுக்கப்பட்டாலும், சுமார் 4 கோடி டன் உயர்தர நிலக்கரி நமக்குக் கிடைக் கும். இந்த நடவடிக்கையில் தனியார் துறை யினருக்கு முழு ஆதரவையும் நாங்கள் வழங்குவோம்.
-இவ்வாறு ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.
ஒன்றிய பாஜக அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப் பதில் முழுவீச்சில் இறங்கியுள்ளது. தனியார் மய நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தாலும், பொதுத்துறையை நிர் மூலமாக்கிவருவது தொடர்ந்துகொண்டிருக் கிறது.

No comments:
Post a Comment