வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கும் நீரை சேமிக்க தமிழ்நாட்டில் 28 தடுப்பணைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 30, 2022

வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கும் நீரை சேமிக்க தமிழ்நாட்டில் 28 தடுப்பணைகள்

சென்னை, மே 30 வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கும் நீரை சேமித்து வைக்கும் வகையில் புதிதாக தடுப்பணை கட்ட தற்போது ரூ.105 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ரூ.1.28 கோடியில் பெரம்பலூர் மாவட்டத்தில் குறும்பலூர் அருகேயும், ரூ.4.33 கோடியில் மணச்சநல்லூர் அருகே உப்பாறு கால்வாய் குறுக்கே, ரூ.4.35 கோடியில் மணப்பாறை அருகே கண்ணுடையாம்பட்டி மணிமுடியாறு குறுக்கே, ரூ.3.22 கோடியில் பெரம்பலூர் கல்பாடி ஓடை குறுக்கே, ரூ.7.43 கோடியில் நெமிலி அருகே கரியக்கூடல் கிராமத்தில் கொசஸ்தலையாற்று குறுக்கே, ரூ.3.24 கோடியில் திருப்பத்தூர் அருகே ஜோன்ட்ரம்பள்ளி பாம்பாறு ஆற்றின் குறுக்கே, ரூ.3.74 கோடியில் மாட்ராபள்ளி குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுகிறது. அதே போன்று, ரூ.4.40 கோடியில் ஆரணி அருகே காமக்கூரில் கமண்டலநாகநதி குறுக்கே  உள்ளிட்ட 28 இடங்களில் மொத்தம் ரூ.105 கோடி மதிப்பில் தடுப்பணை அமைக்கப்படுகிறது என்று நீர்வளத் துறை அதிகாரி தெரிவித்தார்


No comments:

Post a Comment