சென்னை,மே30- மேனாள் முதல மைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழா (ஜூன் 3) அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித் துள்ளது. சென்னை ஓமந்தூரார் அர சினர் தோட்ட வளாகத்தில முத்தமி ழறிஞர் கலைஞர் 16அடி முழு உருவச் சிலை குடியரசு துணைத் தலைவரால் கடந்த 28.5.2022 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்நாடு முழுவதுமுள்ள கல்லூரிகளில் மாவட்ட அளவில் கலைஞர் பிறந்த நாள் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு, முதல் மூன்று இடங் களைப் பெறுகின்ற மாணவர்களுக்கு முறையே முதல் பரிசு ரூ.5ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2ஆயிரம் மற்றும் போட்டியில் கலந்துகொண்டவர் களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் களால் அறிவிப்பு வெளியிடப்பட் டுள்ளது.
தமிழ்நாடு அரசு நேற்று (29.5.2022) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ் திரையுலகில் சிறந்துவிளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு கலைஞர் பெயரில் ‘கலைஞர் கலைத் துறை வித்தகர் விருது’ வழங்கப்படும் என்று ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
வரும் ஜூன் 3ஆம் தேதி முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்கப்பட உள்ளது.
விருதாளரை தேர்வு செய்ய திரைப்பட இயக்குநர் எஸ்பி.முத்து ராமனை தலைவராகவும், நடிகர்சங்கத் தலைவர் நாசர், இயக்குநர் கரு.பழனி யப்பன் ஆகியோரை உறுப்பினர் களாகவும் கொண்டதேர்வுக் குழுவை அமைத்து ஆணையிடப்பட்டுள்ளது.
இக்குழு பரிந்துரைக்கும் விருதாள ருக்கு விருது தொகை ரூ.10 லட்சம், நினைவுப் பரிசு ஆகியவற்றை கலைஞர் பிறந்தநாளான 3.6.2022 அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி சிறப்பு செய்கிறார்.
No comments:
Post a Comment