புதுச்சேரி பாஜகவின் கைபொம்மை ரங்கசாமி நாராயணசாமி குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 30, 2022

புதுச்சேரி பாஜகவின் கைபொம்மை ரங்கசாமி நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி, மே 30 - புதுச்சேரியில் மின் விநியோகத்தை தனியார் மயமாக் குவதை ஒரு காலத்தி லும் ஏற்க மாட் டோம் என்று மேனாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச் சேரியில் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி கூறியதாவது:- 

புதுச்சேரி அரசு மின் விநியோகத்தை தனியார் மயமாக்க ஒன்றிய அரசுக்கு ஒப்புதல் அளித்துள்ளது என்று  நாங்கள் ஏற்கெனவே கூறியிருந்தது உறுதிபட்டுள்ளது. மின்துறை தொழி லாளர்கள் தெருவில் இறங்கி  போராட் டம் நடத்தி கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட  மதச் சார்பற்ற கூட்டணி கட்சிகள் ஒருங்கி ணைந்து பல கட்ட போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம். காங் கிரஸ் ஆட்சி காலத்தில் இந்த நடவ டிக்கையை ஒன்றிய அரசு எடுத்தபோது, அதனை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி னோம். இப்போது பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்ததால் முதலமைச்சர் ரங்கசாமிக்கு அழுத்தம் கொடுத்து கையெழுத்து பெற்று ள்ளார்கள். இத னால் தொழிலாளர்கள் பாதிக்கப்படு வார்கள். 

மின் கட்டணம் உயர்வதன் மூலம் பொதுமக்கள் பாதிக்கப் படுவார்கள். மற்ற மாநிலங்களில் மின் விநியோகம் தனியார் மயமாக்கப்பட்ட பிறகு எந்த நிலையில் இருக்கிறது என்பதை  பார்த்து, அதன்பிறகு தொழிலாளர்க ளிடம் கலந்து பேசி அரசு முடிவு எடுக்கும் என்று முன்பு சொன்ன முதலமைச்சர்,  இப்போது வாயை மூடிக்கொண்டு அந்த கோப்பில் கையெழுத்திட்டுள்ளார். இதிலிருந்து முதலமைச்சர் எவ்வளவு பலவீனமாக உள்ளார். பாஜக எப்படி ரங்கசாமியை ஆட்டிப்படைக்கிறது என்பது தெளி வாகத் தெரிகிறது. இந்த  விவகாரத்தில் நாங்கள் கூட்டணி கட்சிகளோடு கலந்து பேசி தேவைப் பட்டால் நீதி மன்றம் செல்லவும் தயாராக  உள் ளோம். மின் விநியோகத்தை தனியார் மயமாக்குவதை ஒரு காலத்திலும் ஏற்க மாட்டோம். தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தும் கூட ஊதியம் வழங்கப்பட வில்லை. இப்படிப்பட்ட ஓர் அவலமான ஆட்சி புதுச்சேரி மாநிலத்தில் ரங்கசாமி தலைமையில் அரங்கேறி கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment