கலைஞர் சிலையில் “இந்தி திணிப்பை எதிர்ப்போம்” என்பன உள்ளிட்ட 5 வாசகங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 30, 2022

கலைஞர் சிலையில் “இந்தி திணிப்பை எதிர்ப்போம்” என்பன உள்ளிட்ட 5 வாசகங்கள்

சென்னை, மே 30 குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திறந்து கலை ஞர் சிலையின் கீழே "இந்தி திணிப்பை எதிர்ப்போம்" என்பன உள்ளிட்ட 5 வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

சென்னை - ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத் தில், பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் முன்புறம் அண்ணா சாலை ஓரத்தில் 12 அடி உயர பீடத்தில், 16 அடி உயரத்தில் ரூ.1.7 கோடி மதிப்பில், மறைந்த மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்தச் சிலையை குடியரசு துணைத் தலை வர் வெங்கய்ய நாயுடு 28.5.2022 அன்று திறந்து வைத்தார். இந்தி சிலையின் கீழே 5 வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவை:

"வன்முறையை தவிர்த்து 

வறுமையை வெல்வோம்"

"அண்ணா வழியில் 

அயராது உழைப்போம்"

"ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்"

"இந்தி திணிப்பை எதிர்ப்போம்"

"மாநிலத்தில் சுயாட்சி, 

மத்தியில் கூட்டாட்சி"

இந்த 5 வாசகங்களும் சிலையின் கீழே பொறிக்கப்பட்டுள்ளன


No comments:

Post a Comment