சாலை விபத்துகளில் 2020ஆம் ஆண்டில் 1,31,714 பேர் உயிரிழப்பு கட்டுப்படுத்துவதில் அதிகாரிகள் தீவிரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 30, 2022

சாலை விபத்துகளில் 2020ஆம் ஆண்டில் 1,31,714 பேர் உயிரிழப்பு கட்டுப்படுத்துவதில் அதிகாரிகள் தீவிரம்

சென்னை, மே 30 இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில் 1,31,714 பேர் உயிரிழந்துள்ளனர். இதை யடுத்து விபத்தை குறைப் பதற்கு தேவையான நட வடிக்கையில் போக்குவரத் துத்துறை அதிகாரிகள் தீவி ரம் காட்டி வருகின்றனர்.  இந்தியாவில் அலைபேசியில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல், மது அருந்திவிட்டு பயணித்தல், சாலை விதி களை மதிக்காமல் பயணித் தல், அதி வேகத்தில் செல் லுதல், தலைகவசம், சீட் பெல்ட் அணியாதது போன் றவற்றின் காரணமாக வாகன ஓட்டிகள் பலர் விபத் தில் சிக்கிக்கொள்கின்றனர்.

இதனால் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகள் மட்டும் அல்லாது அவர்களை சார்ந்த குடும்பத்தினரும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 2020ஆம் ஆண்டில் 3,66,138 சாலை விபத்துகள் நடத்துள்ளன. இதில் 1,31,714 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக அதிகப்படியான விபத்து தமிழ்நாட்டில் 2020ஆம் ஆண்டில் நடந் துள்ளது. சம்பந்தப்பட்ட ஆண்டில் மட்டும் 45,484 விபத்துகள் மொத்தமாக நடந்துள்ளன. இதில் 7,039 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் மத்திய பிரதே சத்தில் 45,266 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 11,141 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் 34,243 விபத்துகளில் 19,149 பேர் மரணமடைந்துள்ளனர். இதேபோல் கர்நாடகா, கேரளா, மகாராட்டிரா, ஆந்திரா, தெலங்கானா, ராஜஸ் தான், குஜராத் போன்ற மாநி லங்களில் விபத்துகளின் எண் ணிக்கையும், அதனால் ஏற்ப டும் உயிரிழப்புகளின் எண்ணிக் கையும் அதிகமாக இருக் கிறது. எனவே இதனை கட்டுப்படுத்து வதற்கு அரசு அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விபத்து களை கட்டுப்படுத்தும் வகை யில் பல்வேறு நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வரு கிறது. தற்போது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோரும் கட் டாயம் தலைகவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளது. அதிவேகத்தில் வாகனத்தை இயக்குவோர், தேவையற்ற சத்தம் ஏற்படும் வகையிலான ஒலிப் பெருக் கிகளை பயன்படுத்துவோர் பிடிக்கப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.  

இதேபோல் அதிக அள வில் விபத்து நடக்கும் இடங் களை கண்டுபிடித்து, அந்த இடங்களில் எதனால் சாலைவிபத்து ஏற்படுகிறது என்பது கண்டறியப்படு கிறது. பிறகு அந்த இடங் களில் வேகத்தடைகள் அமைப்பது, முன்கூட்டியே விபத்து பகுதி என வாகன ஓட்டிகளுக்கு அறிவிக்கும் வகையில் அறிவிப்பு பல கைகள் வைப்பது, எச்சரிக்கை விளக்குகள் அமைப்பது போன்ற பல்வேறு நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் வரும் ஆண்டுகளில் விபத்து மேலும் குறையும் என அதி காரிகள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment