தனியார் மருத்துவக் கல்லூரியில் 42 பேருக்கு கரோனா தொற்று உறுதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 8, 2022

தனியார் மருத்துவக் கல்லூரியில் 42 பேருக்கு கரோனா தொற்று உறுதி

 செங்கல்பட்டு,மே8- செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் விடுமுறைக்குப்பின்னர் வெளி மாநிலங் களிலிருந்தும், பல்வேறு பகுதிகளிலிருந்தும் கல்லூரி திரும்பியுள்ளனர். கல்லூரி திரும்பிய மாணவர்களில் முதலில் 25 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ள நிலையில் 25 மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். முத லாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கிய நிலையில் மாணவர்களுக்கு நடத்தப் பட்ட பரிசோதனையில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நேற்று (7.5.2022) மேலும் 42 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

4 நாட்களில் மொத்தம் 972 பேர் பரிசோதிக்கப்பட்டதில் இதுவரை 72 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

No comments:

Post a Comment