தமிழ்நாடு முழுவதும் மரங்களை பாதுகாக்க பசுமைக்குழு உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 8, 2022

தமிழ்நாடு முழுவதும் மரங்களை பாதுகாக்க பசுமைக்குழு உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை, மே 8  கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள மரங்களை பாதுகாக்க நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி, ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு நீதிபதிகள் ராஜா மற்றும் சவுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (7.5.2022) விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட குழுக்களைப் போல, மரங்களை பாதுகாப்பதற்காக மாநில அளவிலான பசுமைக் குழுவில் இரு நிபுணர்கள் சேர்க்கப் பட்டுள்ளதாக கூறி, அது தொடர்பான அரசாணையை அரசு தரப்பு வழக் குரைஞர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை என்று தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர். 

No comments:

Post a Comment