டாக்டர் அம்பேத்கர் விருது: பரிசுத் தொகை ரூ.5 லட்சமாக உயர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 8, 2022

டாக்டர் அம்பேத்கர் விருது: பரிசுத் தொகை ரூ.5 லட்சமாக உயர்வு

சென்னை, மே 8 டாக்டர் அம்பேத்கர் விருதுக்கான பரிசுத் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 1995 ஆம் ஆண்டில் இருந்து திருவள்ளுவர் தினத்தன்று, தமிழ்நாடு அரசு சார்பில் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக உழைப்பவர்களை கவுரவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு இந்த விருதினை வழங்கி வருகிறது.  இந்த விருதுக்கான பரிசுத் தொகை ஒரு லட்சம் ரூபாயாக இருந்த நிலையில், 2022 ஆம் ஆண்டு முதல் டாக்டர் அம்பேத்கர் விருதுக் கான பரிசுத்தொகை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.   


No comments:

Post a Comment