1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 14ஆம் தேதி முதல் கோடை விடுமுறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 8, 2022

1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 14ஆம் தேதி முதல் கோடை விடுமுறை

சென்னை, மே 8 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர் களுக்கு வருகிற 14ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறி விக்கப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் (ஜூன்) 13ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. 

10, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில், அடுத்ததாக 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 10ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்க இருக்கிறது.

இதில் 12ஆம் வகுப்புக்கு வருகிற 28ஆம் தேதியும், 11ஆம் வகுப்புக்கு வருகிற 31ஆம் தேதியும், 10ஆம் வகுப்புக்கு வருகிற 30ஆம் தேதியும் தேர்வு நிறைவு பெற இருக்கிறது.

அடுத்த மாதம் 23ஆம் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவு

12ஆம் வகுப்பு மாணவர் களுக்கான பொதுத்தேர்வு விடைத்தாளை மதிப்பிடும் பணி அடுத்த மாதம் (ஜூன்) 2ஆம் தேதி தொடங்கி 8ஆம் தேதி வரை நடைபெற இருக் கிறது. இவர்களுக்கான தேர்வு முடிவை ஜூன் மாதம் 23ஆம் தேதி வெளியிட கல்வித்துறை முடிவு செய்திருக்கிறது.

அதனைத் தொடர்ந்து 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர் களின் விடைத்தாள் மதிப்பிடும் பணிகள் தொடங்கப்பட்டு, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் 17ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 7ஆம் தேதியும் தேர்வு முடிவு வெளியிடப்பட பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது.

1 முதல் 9ஆம் வகுப்பு வரையில்...

1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு நடத்தப் படுமா? என்று முதலில் எழுந்த கேள்விக்கு கல்வித்துறை கண்டிப்பாக தேர்வு நடக்கும் என்று திட்டவட்டமாக தெரிவித்தது. 

அதன்படி, 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர் களுக்கு பள்ளி அளவில் வினாத் தாள் தயாரிக்கப்பட்டும், 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர் களுக்கு மாவட்ட அளவில் வினாத்தாள் தயாரிக் கப்பட்டும் தேர்வு நடத்தப் படுகிறது.

 அந்த வகையில் வருகிற13ஆம் தேதிக்குள் (வெள் ளிக்கிழமை) 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர் களுக்கு தேர்வு நடத்தி முடிக்கப் பட உள்ளது. 

இவர்களுக்கான தேர்வு முடிவு களை வருகிற 30ஆம் தேதி அந்தந்த பள்ளிகள் தெரிவிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.

ஒரு மாதம் கோடை விடுமுறை

வருகிற 13ஆம் தேதியுடன் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் நிறைவு பெறுவதால், வருகிற 14ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் இந்த மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப் பட்டு உள்ளது.

ஒரு மாத கோடை விடு முறைக்கு பிறகு, அடுத்த மாதம் (ஜூன்) 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு, அடுத்த கல்வி யாண்டுக்கான (2022--2023) வகுப்புகள் தொடங்க இருக் கின்றன. அன்றைய தினம் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப் படாது. அதற்கு பதிலாக அவர்களுக்கு அடுத்த மாதம் 24ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப் பட்டு இருக்கிறது.

No comments:

Post a Comment