புதுடில்லி, மே 30 ரயில்வேயில் 91 ஆயிரம் பணியிடங்களை ரத்து செய்ய முடிவு செய்யப்பட் டுள்ளது. இதனால் பணி நிய மனங்களும், நம்பிக்கையும் முடிவுக்கு வந்துள் ளதாக காங்கிரஸ் கட்சி சாடி உள்ளது.
ரயில்வே துறையில் பாது காப்பு முக்கியத்துவம் இல்லாத 50 சதவீத பணியிடங்களை ரத்து செய்து விடுமாறு 17 மண்டல ரயில்வே நிர் வாகங்களுக்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. ரயில்வே உற்பத்தி பிரி வுகள், சக்கர என்ஜின் தொழிற்சாலைகள், ரயில்பெட்டி தொழிற் சாலைகளிலும் இந்த பணியிட வெட்டு செய்யப்படுகிறது. பாது காப்பு முக்கியத்துவம் இல்லாத பிரிவில் மொத்த பணியிடங்கள் 4 லட்சத்து 52 ஆயிரத்து 825 ஆகும். இவற்றில் 91 ஆயிரத்து 649 பணியிடங்கள் காலியாக உள்ளன. ரயில்வேயில் மொத்தம் 91 ஆயிரம் பணியிடங்களை ரத்து செய்வது விட ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பணியிடங் களில் புதிய நியமனங்கள் இருக் காது. இதை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடி உள்ளது.
இதுபற்றி காங்கிரஸ் கட்சி யின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவிக்கையில், "புதிய வேலைகளை வழங்குகிற திறன், மோடி அரசுக்கு இல்லை. ஆனால் இருக்கிற வேலைகளை பறிக்கிற திறன் நிச்சயமாக இருக்கிறது. உங்கள் அராஜக அதிகாரத்தை இளைஞர்கள் உடைத்தெறி வார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்களது எதிர் காலத்தை அழிப்பதற்கு இந்த அரசு பெரும் இழப்புகளை சந்திக் கும்" என கூறி உள்ளார். இதை யொட்டி காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலாவும் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர், "வேலையில்லா திண் டாட்டம் 45 ஆண்டு சாதனையை முறியடித்துள்ளது. கோடிக்கணக் கானோருக்கு வேலை வாய்ப்பு நம்பிக்கை கொடுக்கப் பட்டது. ஆனால் இப்போது ரயில்வேயில் 50 சதவீத வேலை வாய்ப்புகள் என்றைக்கும் இல்லாமல் போய் விட்டன. 91 ஆயிரத்து 629 பணியிடங்களில் இனி ஒரு போதும் நியமனங்கள் கிடையாது" என தெரிவித் துள்ளார்.
மேலும், "கிராமம் முதல் நகரம் வரை, ரயில்வேயிலும், ராணுவத் திலும் வேலை கிடைப்பதற்காக இளைஞர்கள் இரவு, பகலாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மோடி அரசில் பணி நிய மனங்களும், நம்பிக்கையும் முடி வுக்கு வந்து விட்டது" எனவும் அவர் சாடி உள்ளார்.

No comments:
Post a Comment