புதுதில்லி, மே 30- உள்நாட்டு விலை வாசியை கட்டுப் படுத்துவதற்காக கோதுமை மற்றும் சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்த ஒன்றிய அரசு, தற்போது அரிசி ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு விதிக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒன்றிய பாஜக அரசானது, உள்நாட்டுத் தேவையைக் கணக்கில் கொள்ளாமல் ஏற்றுமதிக்கு அனுமதி அளித்ததன் காரண மாக, இந்தியாவில் கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொ ருட்களுக்கான பதுக்கல் அதிகரித்து, அதன் காரணமாக விலைவாசி கட்டுக் கடங்காமல் போனது. மக்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகினர். இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் காரசாரமாக கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்ததற்குப் பிறகு, மிகத் தாம தமாக கடந்த மே 13-ஆம் தேதி கோதுமை ஏற்றுமதிக்கு மோடி அரசு தடை விதித்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு சர்க்கரை ஏற்றுமதிக்கும் கட்டுப் பாடுகளைக் கொண்டு வந்தது. இந்த வரிசையில், தற்போது அரிசி யும் இணை யும் வாய்ப்பு இருப்பதாக பிரதமர் அலு வலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உள்நாட்டில் போதுமான அளவு அரிசி விநியோகத்தை உறுதி செய்யவும், அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்தவும், அரிசி ஏற்றுமதி குறித்து ஒன்றிய அரசு பரிசீலனை செய்யலாம் என தெரிகிறது. பாசுமதி அல் லாத அரிசி மற்றும் ஒரு சில அத்தியாவசியப் பொருட்களின் விலை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், இந்த பொருட்க ளின் விலைவாசி உயர்வுக்கான அறி குறிகள் தெரிந்தால், உடனடியாக ஏற்று மதிக்கு தடை செய்யப்படும் என்றும் கூறப் படுகிறது.
சீனாவிற்கு அடுத்தபடியாக உலக அளவில் அரிசி உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 2021 - 2022 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா, 150 நாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய் துள்ளது. இந்நிலையில்தான் அரிசி உள் ளிட்ட 5 பொருட்களுக்கு ஏற்றுமதி கட்டுப் பாடுகள் விதிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. நடப்பு நிதி யாண்டில் மட்டும் இந்தியா 6.115 பில்லியன் டாலர் பாசுமதி அல்லாத அரிசியை ஏற் றுமதி செய்துள்ளது. கடந்த நிதியாண்டில் விவசாயப் பொருட்களில் அரிசி ஏற்று மதியில்தான் வெளிநாட்டு செலாவணி யையும் ஈட்டியது. இவ்வாறிருக்க, அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்தால் அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்து, ஆராயப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. கோதுமை ஏற்றுமதி தடைக்கே, உலக நாடுகள் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்தன. “இந்தியா கோதுமை ஏற்றுமதியை தடை செய்தது போன்று ஒவ்வொரு நாடுகளும் ஏற்று மதியை நிறுத்தினால் சந்தை நிலைமை மிகவும் மோசமாகும். இது கூடுதல் நெருக் கடியை ஏற்படுத்தும்’’ என்று ஜெர்மனி விவசாயத்துறை அமைச்சர் செம் ஒஸ்டமிர் எச்சரித்தார். கோதுமை ஏற்றுமதி மீதான தடையை விரைவில் இந்தியா மறு பரிசீ லனை செய்து நீக்க வோ அல்லது தளர்த் தவோ வேண்டும் என்று பன்னாட்டு நாணய நிதியத்தின் (IMF) தலைவர் கிறிஸ் டலினா ஜார் ஜீவா கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment