விலைவாசி உயர்வும், வேலையின்மையுமே ‘மோடி அரசின் துயரம் மிகுந்த ‘சாதனை’ காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 30, 2022

விலைவாசி உயர்வும், வேலையின்மையுமே ‘மோடி அரசின் துயரம் மிகுந்த ‘சாதனை’ காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு!

புதுதில்லி, மே 30 - “பணவீக்க அதிகரிப்பு, வேலை யின்மை, மத வன்முறைகளே ஒன்றிய பாஜக அரசின் கடந்த 8 ஆண்டுகால சாதனை” என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 

மத்தியில் பிரதமர் மோடி தலை மையிலான பாஜக அரசு பதவி யேற்று 8 ஆண்டுகள் நிறை வடைவதையொட்டி, இந்த ஆட் சியின் தோல்விகளை பட்டிய லிட்டு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அஜய் மக்கான், ரன்தீப் சிங்  சுர்ஜேவாலா அறிக்கை ஒன்றை வெளியிட்டு பேட்டி அளித் துள்ளனர். 

அதில் மோடி அரசின் 8 ஆண்டுகால ஆட்சியை கடுமையாக சாடியுள்ளனர். “பாஜக-வின் பேர ழிவு மிக்க கொள் கைகளால் இந்தியப் பொருளாதாரம் சரிவ டைந்து விட்டது. ஒருகாலத்தில் வேகமாக வளரும் பொருளாதார மாக இருந்த இந்தியா, தற்போது இடர்ப்பாட்டில் சிக்கியுள்ளது. பணவீக்கமும் வேலையின்மையும் முன்னெப்போதும் இல்லாத அளவில் உயர்ந்து விட்டன.  84 சதவிகித இந்தியர்களின் வருவாய் குறைந்து விட்டது. 12 கோடி பேர் வேலையிழந்து விட்டனர். 60 லட்சம் சிறு குறு நடுத்தர நிறு வனங்கள் மூடப்பட்டுவிட்டன. வேலையின்மை 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து விட்டது.  நாடு முழுவதும் அரசுத் துறைகளில் 62 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. குறிப்பாக, ஒன்றிய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் 9 லட்சத்திற்கும் அதிக மான பணியிடங்கள் காலியாக உள்ளன.  பொதுத்துறை வங்கிகளில் 2 லட்சம் காலியிடங்கள், 1 லட்சத்து 68 ஆயிரம் சுகாதார ஊழியர் பணியிடங்கள் மற்றும் 1 லட்சத்து 76 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதைப்போல ராணுவத்தில் 2 லட்சத்து 55 ஆயிரம் பணியிடங்கள், மத்திய ஆயுதப்படைகளில் 91 ஆயி ரத்து 929 பணியிடங்கள், மாநில காவல் துறைகளில் 5 லட்சத்து 31 ஆயிரம் பணி யிடங்களும், பல்வேறு நீதிமன்றங்க ளில் 5 ஆயிரம் பணியிடங்கள் காலி யாக உள்ளன.

இவைதவிர மாநில அரசு களின் பல்வேறு துறைகளில் 30 லட்சத் துக்கு மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. ‘தேர்தலுக்கு முன்பாக உறுதி யளித்த சிறப்பான நாள்கள் பாஜகவுக்கும், சில தொழிலதிபர் களுக்கும் தான் வந்துள்ளன. அவர்களின் சொத்து மதிப்பு கடந்த 8 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துவிட்டது. நாள் தோறும் ரூ. 1,000 கோடி அளவிற்கு அவர் களின் அதிகரித்து வருகிறது. கரோனா காலத்தில் கடந்த  ஓராண் டில் மட்டும் 142 கோடீஸ்வரர் கள் ரூ. 30 லட்சம் கோடி சம்பாதித்துள் ளனர். ராணுவ வீரர்களின் வீரத்தை வைத்து வாக்கு சேகரிக்கும் பாஜக, அவர்களுக்கான ‘ஒரே பதவி; ஒரே ஓய்வூதிய’ திட்டத்தை அங்கீகரிக்க மறுக்கிறது.  மோடியின் 8 ஆண்டுகால ஆட்சி யில் 10 ஆயிரம் மதமோதல்கள் நடை பெற்றுள்ளன. 2016-2020 வரையிலான காலத்தில் 3 ஆயிரத்து 400 மதக்கல வரங்கள் நடந்திருப்பதாக உள்துறை அமைச் சக அறிக்கை கூறுகிறது. ஆனால் 

8 ஆண்டுகால பாஜக ஆட்சியில் நடந்துள்ள மதக்கலவரங்க ளின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண் டும்.  கடந்த 2015 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில், தாழ்த்தப் பட்ட மக்கள்  மீதான வன்முறை 12 சதவிகிதம் அதிகரித்து உள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் காஷ்மீரில் 548 பாதுகாப்பு படையினர், 324 பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். மோடியின் 8 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் பெரும் துயரத் தையே அனுபவித்து வருகின்றனர். இவ்வாறு அஜய் மக்கான், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா சாடியுள்ளனர்.

No comments:

Post a Comment