வேலூர், மே 30 காவல்துறை ஆய்வாளர்களுக்கு 2 வாரத்துக்கு ஒருமுறை விடுமுறை அளிக்க விரைவில் அரசாணை வெளியிடப்படும் என வேலூரில் 4 மாவட்ட அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு கூறினார்.
வேலூர் காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் வேலூர் சரக அளவிலான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந் திரபாபு நேற்று (29.5.2022) வந்தார்.
இதில் வேலூர் சரகத்திலுள்ள 4 மாவட்டங்களில் குற்றங்களை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் அதனை மேம்படுத்துவது குறித்தும், துப்பு துலங்காமல் நிலுவையி லுள்ள வழக்கு விசாரணைக்கு நட வடிக்கைகள் குறித்தும், ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகளின் மீது எடுக்கப்பட்டு வரும் கடும் நடவ டிக்கைகளை தொடர்ந்து தீவிர படுத்துதல் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட் டுள்ளது. மேலும் விபத்துகளை தடுக்க சாலைப் பாதுகாப்பு விதிகளை மேம்படுத்துவது குறித்தும், இணையதள குற்றங்களில் மேற் கொள்ளப்படும் நடவடிக்கைகள், சைபர் கிரைம் பிரிவு காவலர்களுக்கு நிபுணர் தத்துவத்தை மேம்படுத்தி கொடுக்கப்படும் சிறப்பு அம்சங்கள் குறித்தும், பொது மக்கள் கொடுக்கும் புகார் மனுக்களின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு அவர்களின் குறைகளை விரைந்து களைய எடுக்கப்படும் நடவடிக் கைகள் குறித்தும் காவல்துறை தலைமை இயக்குநர் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு கூறுகையில், ‘‘காவல் துறையில் ஏற்கனவே காவலர்களுக்கு விடுமுறை அளிக்கப் பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது சிறப்பு உதவி ஆய்வா ளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோருக்கு 2 வாரத்திற்கு ஒருமுறை விடுப்பு வழங்குவது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் கூறியுள்ளார். இதுதொடர்பாக விரை வில் அரசாணை வெளியிடப்படும்’’ என்றார்.

No comments:
Post a Comment