அய்தராபாத், மே 9 தெலங்கானா மாநிலத்தில் 2024 ஆம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அய்தராபாத்தில் நடைபெற்ற தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சி குழு கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்; ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலன் காக்கும் அரசாக காங்கிரஸ் அரசு திகழ்கிறது. காங்கிரசின் கொள்கைகள் மீது நம்பிக்கை வைத்துள்ள இளைஞர்களை அழைக்கிறேன். தெலங்கானா மக்கள் மற்றும் சோனியாவின் கனவுகளை சந்திரசேகர ராவ் என்ற தனி நபர் மட்டுமே அழித்து விட்டார்.
2014 இல் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் உருளையின் விலை ரூ.410 ஆகவும் மானியம் ரூ.827ஆகவும் இருந்தது. தற்போது பாஜக ஆட்சியில் உருளையின் விலை ரூ.999 ஆகவும் மானியமாக ஒரு ரூபாய் கூட வழங்கப்படு வதில்லை. ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்துக்காக காங்கிரஸ் கட்சி பொருளாதாரக் கொள்கைகளை வகுத்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய குடியுரிமையை துறந்து வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்த
7.5 லட்சம் பேர்
புதுடில்லி, மே 9- கடந்த 5 ஆண்டுகளில் 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்தியக் குடியுரிமையைத் துறந்து, வெளி நாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இதுதொடர்பான புள்ளி விவரங்களை ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச் சகம் மாநிலங்களவையில் சமர்ப்பித்துள்ளது. அதன்படி, 2016 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில், 7 லட்சத்து 49 ஆயிரத்து 765 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள் ளனர். அதிகபட்சமாக 2019-ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 17 இந்தியர்கள் தங்களின் குடி யுரிமையைத் துறந்துள்ளனர்.
கரோனா பெருந்தொற்று பரவிய 2020ஆம் ஆண்டில் மட்டும் மிகக் குறைவாக 85 ஆயிரத்து 248 இந்தியர்கள் குடியுரிமையைத் துறந் துள்ளனர். 2021 ஆம் ஆண்டில் கூட ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 287 இந்தியர்கள் குடி யுரிமையை துறந்துள்ளனர். கடந்த அய்ந்து ஆண்டுகளில் தங்கள் குடியுரிமையை துறந்த இந்தியர்களில் 82 சதவிகிதம் பேர் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இதில் அமெரிக்காவில் மட்டும் 2017 ஆம் ஆண்டுக்குப் பின் சுமார் 2 லட்சத்து 56 ஆயிரம் இந்தியர்கள் குடியேறி யுள்ளனர்.
அடுத்ததாக கனடாவில் சுமார் 91 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியர்கள் குடிபெயர்ந்துள்ளனர். 31 இந் தியர்கள் பாகிஸ்தானிலும், 2,174 இந்தியர்கள் சீனாவிலும், 94 இந்தியர்கள் இலங்கையிலும் குடியேறியுள்ளனர். இந்த காலக்கட்டத்தில் 5 ஆயிரத்து 891 வெளிநாட்டினருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 117 இந்துக்கள், சீக்கியர், ஜைன மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த அந்த நாடுகளின் சிறுபான்மையோர் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுகு இடம்பெயர்ந்து குடியுரிமை பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment