முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது!
சென்னை,மே7- தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய மாநிலங் களின் பயன்மிகு ஆளுமைக்கான மய்யத்திற்கும் இடையே புரிந் துணர்வு ஒப்பந்தம் நேற்று (6.5.2022) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் முன்னிலையில் நேற்று (6.5.2022) தலைமைச் செயலகத் தில், தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய மாநிலங்களின் பயன் மிகு ஆளுமைக்கான மய்யத் துடன்(Centre for Effective Governance of Indian States) அரசின் கொள்கைகள் மற்றும் அதனை செயல்படுத்துவதில் தொழில் நுட்ப உதவி மற்றும் பகுப்பாய்வு உதவிக்கான புரிந் துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட் டது. இந்திய மாநிலங் களில் பயன்மிகு ஆளுமைக்கான மய்ய மானது (CEGIS) இலாப நோக் கமற்ற அமைப்பாகும். இது மாநி லங்களின் செயல் பாட்டினை மேம்படுத்தும் நோக்குடன் செயல்படுகிறது. இந்த மய்யம் ஏற்கெனவே சில மாநில அரசு களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூல மாக இம்மய்ய மானது, மாநில வருவாயை பெருக்குதல், அரசு கொள் முதலின் செயல் திறனை மற்றும் பணத்திற்கான மதிப்பினை மேம் படுத்துதல், மனித வள மேலாண்மை அமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை அமைப்பினை ஒருங்கிணைப்பிற்கான பகுப் பாய்வு செய்தல் போன்ற பணிகளில் தமிழ்நாடு அரசிற்கு உதவிபுரியும். இந்நிகழ்வின் போது, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செய லாளர் முனைவர் வெ.இறை யன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் என்.முரு கானந்தம், நிதித்துறை கூடுதல் செயலாளர் பிரசாந்த் மு.வட நெரே, துணைச் செயலா ளர் (பட்ஜெட்) சிபிஆதித்யா செந்தில்குமார், துணைச் செய லாளர் பிரத்திக் தயாள், இந்திய மாநிலங்களின் பயன்மிகு ஆளு மைக்கான மய்யத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைவர் ஆஷிஷ் தவான், தலைவர் டாக்டர் விஜய் பிங்களே மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment