தமிழ்நாட்டில் மகப்பேறின்போது சிசு மரணம் இல்லாத நிலையே இலக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 29, 2022

தமிழ்நாட்டில் மகப்பேறின்போது சிசு மரணம் இல்லாத நிலையே இலக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை, மே 29- அரசு மருத்துவமனைகளில் 60 விழுக்காட்டினர் மட் டுமே மகப்பேறு சிகிச்சை பெறுவதாக மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் விடுதியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான றிமிசிவிகீ 2.0 இணையதளத்தில் மகப்பேறு விவரத்தை சுயமாக பதிவு செய்து எண் பெறும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் துவக்கி வைத்தார். 

இதனை தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பேசுகையில், "அரசு மருத்துவமனைக ளில் 60விழுக்காட்டினர் மட்டுமே மகப்பேறு சிகிச் சைகளை மேற்கொள்கின் றனர். இந்த எண்ணிக்கை, அடுத்த 2 ஆண்டுகளில் 75விழுக்காடாக உயர வேண்டும் என்பதுதான் சுகாதாரத் துறை இலக்கு. இதனால் அரசு மருத்துவ சேவைகளையும், கட்ட மைப்பையும் மேம்படுத் தவது அவசியம். 70.43 லட்சம் பேர் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் பயன்பெற்றுள்ள னர். ஆகஸ்ட் மாதத்திற் குள் 1 கோடி பேர் என்ற எண்ணிக்கையை எட்ட வேண்டும். இதற்காக சேவையாற்றும் சுகாதா ரத் துறை பணியாளர்க ளுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் 1.22 கோடி பேர் 2ஆம் தவணை தடுப்பூசியும், 43லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியும் செலுத்தாமல் உள்ளனர். இவர்கள் விரைந்து தடுப் பூசி செலுத்த வேண்டும். மாதம் ஒரு தடுப்பூசி முகாம் நடத்தப்படும். இதற்காக 1.3 கோடி டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. 

ஜூன் 12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது. தொற்று நோய் சவாலான ஒன்றாக உள்ளது, இதனை கட்டுப்படுத்த, தடுப்பூசி கண்டறியும் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 1000 மகப்பேறில் 15 சிசுக் கள் உயிரிழப்பு என்றி ருந்த எண்ணிக்கை 13 ஆக குறைந்துள்ளது. சிசு உயி ரிழப்பு குறைவாக உள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. கேரளா முதலிடம் பெற் றுள்ளது. விரைவில், சிசு மரணம் இல்லாத மாநி லங்கள் பட்டியலில் தமிழ் நாடு முதலிடம் பெற வேண்டும் என்பதே அர சின் இலக்கு" என்று அமைச்சர் மா.சுப்பிர மணியன் பேசினார்.

No comments:

Post a Comment