புதிய கல்விக்கொள்கையை ஏற்க வேண்டிய அவசியம் தமிழ்நாட்டில் இல்லை உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 29, 2022

புதிய கல்விக்கொள்கையை ஏற்க வேண்டிய அவசியம் தமிழ்நாட்டில் இல்லை உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி பேட்டி

 சென்னை, மே 29- சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி நேற்று (28.5.2022) செய்தியாளர் களைச் சந்தித்தார். 

அப்போது சென்னை வந்த பிரதமர் மோடி, புதிய கல்விக் கொள்கை யில், பொறியியல் மருத்து வம் உள்ளிட்ட படிப்பு களை தாய்மொழியில் படிக்க ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளதாக கூறியிருந்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "2010இல் மேனாள் முதலமைச்சர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் நான் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தேன், அந்த ஆண்டே ஒரு அர சாணை வெளியிடப் பட்டு தமிழ் வழியில் பொறியியல் படிப்புகள் அறிமுகபடுத்தப்பட்டி ருக்கிறது. அந்த தமிழ்வழி யில் படித்த மாணவர்க ளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப் படும்" என்றும் அறிவிக் கப்பட்டிருக் கிறது.

2010ஆம் ஆண்டி லேயே இது உள்ளது, இதுவொன்றும் புதி தல்ல. தொழில் படிப்பு களை தமிழ்வழியில் படிப்பது எல்லாம் ஏற் கெனவே தொடங்கி விட்ட ஒன்றுதான். இது எதுவும் நம் மாநிலத்தில் புதிதாக நுழையவில்லை.

பல்வேறு முறைகேடுகள்

தமிழ்நாடு முதலமைச் சர் மிக தெளிவாக உத் தரவிட்டிருக்கிறார். புதிய கல்விக் கொள்கை யில் பல்வேறு முறைகேடுகள் இருப்பது என்பது உண்மை. எனவே, தமிழ்நாடு கல்விக் கொள்கை, நாம் இதுவரை பின்பற்றிய முறையில் எந்த தவறும் இல்லை. பிளஸ் 2 தேர்வு, 3 ஆண்டு கால பட்டப் படிப்பு, 2 ஆண்டு கால மேல்படிப்பாக இருந்தா லும் சரி அனைத்துமே சரியாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றன.

ஆகவே, தமிழ்நாட் டைப் பொறுத்தவரை தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவ தற்காக முதலமைச்சர் ஒரு குழுவை நியமித்திருக் கிறார். அந்த குழு ஆரம் பக் கல்வி, உயர் கல்வி மற்றும் தமிழ்நாட்டில் இருக்கின்ற சில மாற்றங் களை வளர்ச்சிகளை உரு வாக்க வேண்டும் என்ற முடிவுகளை எடுத்து அது தொடர்பாக முதலமைச் சர் அறிவிப்பார்.

எனவே, தமிழ்நாட் டைப் பொறுத்தவரை புதிய கல்விக் கொள்கை என்பது, நடைமுறைக்கு வரவேண்டிய அவசியமே இல்லை. ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று முதலமைச் சர் தெளிவாக வலியுறுத்தி யிருக்கிறார்.அதேபோல், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பிரத மரை நேருக்கு நேர் கேட் டவர் தமிழ்நாடு முதல மைச்சர்.

மத்திய பல்கலைக்கழ கங்களில் எல்லாம் நுழை வுத் தேர்வு நடத்த ஒன்றிய அரசு உத்தரவிட்டிருந் தது. ஆனால் மொத்த முள்ள 55 மத்திய பல் கலைக்கழகங்களில் 22 மத்தியப் பல்கலைக்கழ கங்கள் தேர்வு நடத்த வேண்டாம் என்றுகூறி மறுத்துள்ளனர். இதனால் தான் நாம் ஆரம்பத்தி லேயே வேண்டாம் என்று கூறினோம்.

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு...

கலை,அறிவியல் படிப்புகளுக்கெல்லாம் நுழைவுத் தேர்வு நடத்து வது எல்லாம் அந்தந்த மாநிலங்களே ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்றுதான் தமிழ்நாடு முதலமைச்சர் ஆரம்பம் முதலே வலி யுறுத்தி வருகிறார்.

நாடாளுமன்ற உறுப் பினர்கள் மூலமாகவும் வலியுறுத்தியுள்ளார். மாநிலப் பட்டியலில் கல்வி கொண்டுவரப்பட் டால் இவையெல்லாம் சரியாகிவிடும். புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழலில் தமிழ்நாடு இல்லை என்று அவர் கூறினார். 

No comments:

Post a Comment