சென்னை, மே 10- 2050 ஆம் ஆண்டளவில் கடல்களில் மீன்களை விட அதிக பிளாஸ்டிக் இருக்கும் என்று ஒரு ஆராய்ச்சி எச்சரிக்கிறது. பிளாஸ்டிக் கழிவுகளை ஒழிக்க ஒரு தலைமுறையை அணிதிரட்டும் நோக்கத்துடன் தொடர்ந்து அய்ந்தாவது ஆண்டாக வரும் மே 23 முதல் ஜூன் 8 வரை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடை பெறுகிறது.
அடிடாஸ் ரன்டாஸ்டிக் ஆப், ஜாய்ரூன், கோடூன், யூடோங்குவான் அல்லது ஸ்ட்ராவா செயலிகள் மூலம் பங்கேற்பாளர்களால் பதிவுசெய்யப்பட்ட ஓட்டம், டென் னிஸ் அல்லது கால்பந்து போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட செயல்களில் இருந்து ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும், பார்லி நிறுவனம் ஒரு பிளாஸ்டிக் பாட்டிலின் எடைக்கு சமமான எடையுடைய (அதிகபட்சம் 250,000 கிலோ வரை) பிளாஸ்டிக் கழிவை அது கடலோரப் பகுதிகளை அடை யும் முன் சுத்தம் செய்யும்.
இது குறித்து அடிடாஸின் நிலைத்தன்மை துறைக்கான உபதலைவர் கட்ஜா ஷ்ரைபர் கூறுகையில், "பிளாஸ்டிக் கழிவுகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போட்டி யில் நேரம் நமக்கு எதிராக உள்ளது. இது எப்படி ஒரு தொழில்துறை அளவிலான பிரச்சனையாக இருக்கிறதோ, அதே போல, இதற்கு தொழில்துறை அளவிலான தீர்வுகள் தேவைப்படுகின்றன, நமது விளையாட்டு சமூகத்தை ஒன்றிணைப்பதன் மூலம், கடலைச் சுத்தப்படுத்துவதற்கு அவர்களின் செயல்களும் சுறுசுறுப்பாக செயல்படும் விதமும் பங்களிக்கும் அனுபவத்தை மக்களுக்கு வழங்கு வதன் மூலம் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு எதிரான உண்மை யான நடவடிக்கையை நாம் ஊக்குவிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment