எல்லாம் தனியார் மயம் தானாம் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 10, 2022

எல்லாம் தனியார் மயம் தானாம் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

கோவை, மே 10- “நாட்டில் பொதுத் துறை நிறுவனங்கள் உள்ள அனைத்து இடங்களிலும் தனியார் துறையினர் வரலாம்” என்று கோவையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

தன்னார்வத் தொண்டு நிறுவன மான 'கோவை ஸ்டார்ட் அப்ஸ் அகாடமி' சார்பில் கோவையி லுள்ள தொழில்முனைவோருக்கு ‘‘ஸ்டார்ட் ஆப் துருவ்’’ விருது வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் ஸ்டார்ட் அப் அகாடமியின் தலைவர் ஜி. கார்த்திகேயன் வரவேற்றுப் பேசி னார். இவ்விழாவில் ஒன்றிய நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமன் பங் கேற்று தொழில் முனைவோருக்கு விருதுகளை வழங்கினார்.

தொகுப்பு தொழில் கட்டமைப் புகள்: பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது: "அந்தக் காலத் தில் தொகுப்பாக உள்ள தொழில் கட்டமைப்புகளுக்கு அதிக முக்கி யத்துவம் கொடுத்தனர். எந்தெந்த நிறுவனம் எங்கு இருக்க வேண்டும் என மத்தியில் முடிவு செய்யப்பட் டது. அவ்வாறு தொகுப்பாக உள்ள தொழில் கட்டமைப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும் அவர்களின் உற்பத்தி அளவு நிர் ணயிக்கப்பட்டு கண்காணிக்கப்பட் டது. இதுபோன்ற நடைமுறைக ளால் தான் 'லைசென்ஸ் கோட்டா ராஜ்' என்ற பெயர் வந்தது. தொழி லில் உற்பத்தியை அதிகரித்து, உள் ளூர் விற்பனைக்கு போக, மீதியை ஏற்றுமதி செய்தால் உங்களுக்கு மட்டுமல்லாமல், நாட்டுக்கும் அந்நிய செலாவணி கிடைக்கும்.

நமது நாட்டில், பல நூற்றாண் டுகளாக தொழிலோ, உற்பத்தியோ, விவசாயமோ செய்து வந்தனர். நடு வில் பல தரப்பட்ட இடையூறுகள் காரணமாக, உற்பத்தி முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்ய வேண் டிய சூழல் ஏற்பட்டது. இதனால் இயற்கையான திறமைகளுக்கு இழப்பு ஏற்பட்டன. இந்தச் சூழ லில், நம் நாட்டில் இருக்கும், தொழில் செய்யக்கூடிய, இயற்கை யாக உள்ள தத்துவத்தை முழுமை யாக உபயோகிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், கொள்கையில் மாறுதல் வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். கொள்கையில் மாறுதல் ஏற்படுத் தியதால் தான் கடந்த 2021 நிதிநிலை அறிக்கையில் பொதுத் துறைக்கு என பிரத்யேக இடம் எங்கும் இருக்காது எனக் கொள்கை யாகவே அறிவித்தோம். பொதுத் துறை நிறுவனங்கள் உள்ள அனைத்து இடங்களுக்கும் தனியார் துறை களும் வரலாம். இதனால் நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய இடங்களிலும் தனியார் துறையி னர் வரலாம்.

நாட்டின் நலனுக்காக சில இடங்களில் பொதுத்துறை நிறுவ னங்கள் கட்டாயம் இருக்கும். தனி யார் துறையினர் எங்கு அவர்க ளுக்கு வணிக ரீதியில் வாய்ப்பு கிடைக்கிறதோ, அங்கு முதலீடு செய்து தொழில் செய்யலாம். அதற்காக வழிவகை ஏற்படுத்தப் பட்டுள்ளது. தொகுப்பாக உள்ள தொழில் கட்டமைப்புகளுக்கு மட் டும் என்று இருந்ததை, அனைவருக் குமானது என மாற்றியுள்ளோம்.

No comments:

Post a Comment