ஏட்டு திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 10, 2022

ஏட்டு திக்குகளிலிருந்து...,

 டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

தேசத்துரோக சட்டம் குறித்து மறுபரிசீலனை செய்ய முடிவெடுக்கப் பட்டுள்ளதாக ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஜிப்மர் மருத்துவமனை நிருவாகத்தில் ஹிந்தி கட்டா யம் என்பதைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்.

தி ஹிந்து:

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு பீகாரில் இருந்து டில் லிக்கு நடந்து செல்வது தான் ஒரே வழி என்கிறார் தேஜஸ்வி யாதவ்

தி டெலிகிராப்:

கேரளாவின் மிகவும் பிரபலமான கோவில் திரு விழாவான திருச்சூர் பூரம் நிகழ்வின் போது யானைகளின் மேல் காட்டப்படும் அலங்கரிக்கப்பட்ட குடைகளில் ஹிந்துத்துவாதியான சாவர்க்கர் படம் இடம் பெற்றிருந்தது சர்ச்சையில் சிக்கியுள்ளது.

நீதிபதிகளின் அகில இந்திய மூத்தோர் பட்டியலில் நீதிபதி துலியா 30-ஆம் இடத்திலும், ஜே.பி.பர்தாலியா 48-ஆம் இடத்திலும் உள்ளார்கள். பலரையும் பின்னுக்கு தள்ளி உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்திய ரூபாய் மதிப்பு அய்.சி.யூ.வில் உள்ளது. ஊடகத் தலைப்புச் செய்திகளில் கவனம் செலுத்துவதைவிட்டு, பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் கவனம் செலுத்துங்கள் என பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி தாக்கு.

உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பதவிக்கான இ.டபிள்யூ.எஸ்.  ஒதுக்கீட்டு ஆசிரியர் இடங்கள் சான்றி தழ் பெற தகுதியானவர்கள் இல்லாததால் காலியாக உள்ளன.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment