சென்னை, மே 29 சென்னையில் பா.ஜ.க.. மாநில தலைவர் அண்ணாமலை 27-.05-.2022 அன்று செய்தி யாளர்களிடம் பேசினார். அப்போது விதிகளை மீறி பதாகைகள் வைக்கப்பட்டது குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு "உங்களுக்கு 200 ரூபாய் " என அவரை இழிவுபடுத்தி அண்ணாமலை பதிலளித்தார். இதற்கு எதிர்ப்பு எழுந்தவுடன், "சரி 500 ரூபாய் வாங்கிக் கொள்ளுங்கள்" "ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொள் ளுங்கள்.., 2 ஆயிரம் ரூபாய் அறிவாலயத்தில் இருந்து கிடைத்து விடும்" என்றெல்லாம் அடுத்தடுத்து அவதூறு களை அண்ணாமலை அள்ளி வீசியுள்ளார். இந்த அவதூறுகளுக்கு 'தர்மம்' என்று விளக்கம் வேறு கொடுத்துள்ளார்.
பத்திரிகையாளர்கள் தங்களுடைய கடமைகளைச் செய் வதற்கு அறிவாலயத்தில் கையூட்டு வாங்கு கிறார்கள் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் அண்ணாமலைக்கு சென்னை பத்திரி கையாளர் யூனியன் (MUJ) கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.
கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்களை இழிவு படுத்துவது, அநாகரிகமாக நடந்துகொள்வது, மிரட்டுவது போன்ற நடவடிக்கை களை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண் டும். பத்திரிகையாளர்களின் உரிமையையும் ஊடக சுதந் திரத்தையும் மதிக்க வேண்டும் என்றும் சென்னை பத்திரிக்கை யாளர் யூனியன் கேட்டுக்கொள்கிறது என சென்னை பத்திரிகை யாளர் யூனியன் தலைவர் எல்.ஆர்.சங்கர், பொதுச்செயலாளர் வி.மணிமாறன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment