கோயில் பணிகள் -தில்லுமுல்லுகள்! ஒரே ஆண்டில் 4077 புகார்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 29, 2022

கோயில் பணிகள் -தில்லுமுல்லுகள்! ஒரே ஆண்டில் 4077 புகார்கள்

சென்னை, மே 29 தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை, இந்து சமய  அற நிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் கடந்தாண்டு மே 25ஆம் தேதி பொதுமக்கள்  மற்றும் பக்தர்கள் வசதிக்கான பொது மக்கள் குறைகேட்பு சிறப்பு மய்யம் தொடங்கி  வைக்கப்பட்டது. 

இந்த சேவையை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அலுவலக வேலை  நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 04428339999 என்ற எண்ணில்  தொடர்பு கொண்டு கோயில் தொடர்பான கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம்.    

மேலும் இதுவரை சிறப்பு மய்யம் தொடங்கப்பட்டு  பொது மக்களிடமிருந்து 4077 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.  

இதில் முழுமையாக  நட வடிக்கை எடுத்து முடிக்கப்பட்ட மனுக்கள் 351, நடவடிக்கை மேற் கொள்ளபட்டு  வரும் மனுக்கள் 3279, நிராகரிப் பட்ட மனுக்கள் 447 ஆகும். 

இந்த குறைகேட்பு  மய்யத்தில் கோயில்களின் திருப் பணிகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் பற்றிய  புகார்கள் அதிகம் வரப் பெற்றுள்ளன.

மேலும், 1550 கோரிக்கைகளில் கோயில்  பற்றிய தகவல்கள், திறந்திருக்கும் நேரம், இருப்பிடம், வழித்தடம், தங்கும்  விடுதிகள் பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டன. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்

ளது.

No comments:

Post a Comment