பா.ம.க.வுக்குப் புதிய தலைவர் டாக்டர் அன்புமணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 29, 2022

பா.ம.க.வுக்குப் புதிய தலைவர் டாக்டர் அன்புமணி

சென்னை, மே 29 பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் திருவேற் காட்டில் டாக்டர் ராமதாஸ் முன் னிலையில் நடைபெற்றது. ஜி.கே.மணி தலைமை தாங்கினார்.

பா.ம.க. தலைவராக 25 ஆண்டு களுக்கும் மேலாக பணியாற்றிய ஜி.கே.மணிக்கு சமீபத்தில் பா.ம.க. சார்பில் பாராட்டு விழா நடத்தப் பட்டது.

இதையடுத்து கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று முடிவு செய்தனர். ஏற்கெனவே கட்சியின் இளைஞர் அணி தலைவராக இருக்கும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம். பி.க்கு தலைவர் பதவி வழங்க வேண்டும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் வற்புறுத்தி வந்தனர்.

இதையடுத்து அன்புமணியை தலைவராக தேர்வு செய்வதற்காக சிறப்பு பொதுக்குழு கூட்டப்பட்டது. பொதுக் குழுவில் பொதுச் செய லாளர் வடிவேல் ராவணன், பொரு ளாளர் திலகபாமா, வன்னியர்சங்க தலைவர் பு.த.அருள்மொழி, பேரா சிரியர் தீரன், தேர்தல் பணிக்குழு தலைவர் ஏ.கே.மூர்த்தி, சமூக முன் னேற்ற சங்க தலைவர் சிவப் பிரகாசம் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகி கள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.யை தலைவராக தேர்வு செய்வதற்கான தீர்மானம் முன்மொழியப்பட்டது.  இந்தத் தீர்மானத்தை வழி மொழியும் வகையில் பொதுக்குழு உறுப்பி னர்கள் அனைவரும் எழுந்து நின்று கரவோசை எழுப்பி ஆதரவளித் தார்கள். இதையடுத்து பா.ம.க. தலை வராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார்.

No comments:

Post a Comment