சென்னை, மே 9- வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச் சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன் னால், கொப்பரை தேங் காய் விலை மிகவும் குறைந் திருந்தது. இதனால், விலை ஆதரவு திட்டத்தின் கீழ், அரவை கொப்பரைகளை விவசாயிகளிடமிருந்து நேரடியாக குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள் முதல் செய்ய அரசு நட வடிக்கை எடுத்தது. 50,000 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்வதற் கான ஒப்புதலினையும் ஒன்றிய அரசிடமிருந்து பெற்றுள்ளது.
கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களிலுள்ள 42 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடர்ந்து நடந்து வரு கிறது. அதன்படி 2,221 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் விவசாயிகளிட மிருந்து நேரடியாக குறைந்த பட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப் பட்டுள்ளது.
தற்போது கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், கொப்பரை தேங்காய் விலை குறைந்தபட்ச ஆத ரவு விலையைவிட குறைந் துள்ளது. இத்தருணத்தில் மாநில அரசு எடுத்துவரும் முயற்சியை நன்கு பயன் படுத்தி, விவசாயிகள் தங் கள் பகுதியிலுள்ள ஒழுங்கு முறை விற்பனைக்கூடங் களை அணுகி, அரவை கொப்பரைக்கு ஒன்றிய அரசு அறிவித்த குறைந்த பட்ச ஆதரவு விலையான கிலோவுக்கு ரூ.105.90 பெறலாம். எனவே, கொப் பரை தேங்காய் உற்பத்தி செய்யும் விவசாயிகள் தங் களது சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்குப் புத்தக நகல்களுடன் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத் தில் பதிவு செய்து, கொப் பரை தேங்காயை விற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப் படு கிறார்கள்.
அரசு நிர்ணயித்துள்ள தரத்தில் கொப்பரை தேங்காய்கள் விவசாயிகளிடமிருந்து நேரடி யான கொள்முதல் செய் யப்படும் என்பதால், நன்கு உலர வைத்து, சுத்த மான கொப்பரைகளை தரம்பிரித்து கொள் முதலுக்கு கொண்டு வர வேண்டும். கொப்பரை தேங்காய்க்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் மூலம் அனுப்பி வைக்கப்படும். தற்போது, தேங்காய்க்கான விலை யும் வெளிச் சந்தையில் குறைந்துள்ளதால், கொப்பரை தேங்காய் உற் பத்தியில் ஈடுபட்டுள்ள தென்னை விவசாயிகள் அனைவரும், மாநில அரசு எடுத்துள்ள இந்த கொப்பரை தேங்காய் கொள்முதல் திட்டத்தில் இணைந்து பயனடைய லாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment