சிம்லா, மே 9 இமாச்சலப் பிரதே சத்தின் தர்மசாலாவில் உள்ள சட்டப்பேரவை வளாக வாயிலில் காலிஸ்தான் கொடிகள் கட்டப் பட்ட செயலுக்கு அம்மாநில முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் கடும் கண்டனம் தெரிவித் துள்ளார்.
தரம்சாலாவில் உள்ள இமாச் சலப் பிரதேச சட்டசபையின் பிரதான வாயிற்கதவுகள் மற்றும் சுற்றுச்சுவரில் அடையாளம் தெரியாத சில நபர்கள் காலிஸ்தான் கொடிகளை கட்டியுள்ளனர். பாதுகாப்பு நிறைந்த அப்பகுதியில் காலிஸ்தான் கொடிகள் கட்டப் பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 7.5.2022 அன்று நள்ளிரவு அல்லது 8.5.2022 அன்று அதிகாலையில் இந்த நிகழ்வு நடந் திருக்கலாம் என கூறப்படுகிறது. காலிஸ்தான் கொடிகளைப் பார்த் ததும் அதிர்ச்சி அடைந்த காவல் துறை அதிகாரிகள் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்தினர்.
இது பஞ்சாப் மாநிலத்தில் இருந்து வந்திருந்த சில சுற்றுலாப் பயணிகளின் செயலாக இருக்க லாம் என்றும், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளதாகவும் காவல் கண்காணிப்பாளர் குஷால் சர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந் தக் கோழைத்தனமான செயலை நான் வன்மையாகக் கண்டிக் கிறேன். கோழைகள் இரவோடு இரவாக தர்மசாலாவில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் காலிஸ்தான் கொடியை கட்டிச் சென்றுள்ளனர். இங்கு குளிர்கால கூட்டத்தொடர் மட்டுமே நடை பெறுகிறது. இச்சம்பவம் மூலம் இப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட வேண்டும் என்பது உறுதியாகியுள்ளது. இந்தச் சம் பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும். குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும்'' என்று பதிவிட்டுள்ளார்.
காலிஸ்தான் இயக்கம் என்பது சீக்கிய மதத்தைச் சேர்ந்த தேசி யத்தை வலியுறுத்தும் ஒரு அமைப்பு. சீக்கியர்கள் அதிகமாக வாழும் பஞ்சாப் மாநிலத்தையும் மற்றும் பாகிஸ்தானில் சீக்கியர்கள் அதிகமாக வசித்த ஒரு பகுதியையும் இணைத்து சீக்கியர்களுக்கென தனி நாடு அமைக்க வேண்டும் என் பதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.

No comments:
Post a Comment