தஞ்சை, மே 9 பள்ளிக்கு வரக்கூடிய மாணாக்கர்களை கை கூப்பி வரவேற்கிறேன் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசினார்.
திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் ஒன்றியத்தில் உள்ள தனியார் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டடத்தை திறந்து வைக்க அன்பில் மகேஷ் வந்தி ருந்தார். அப்போது மேடை யில் பேசிய அவர், ”பெற் றோர்கள் தங்கள் பிள்ளை களை பக்கத்து வீட்டு பிள்ளை எப்படி படிக்கிறார், எதிர் வீட்டு பிள்ளை எப்படி படிக்கிறார், அண்ணன் எப்படி படிக்கிறார், மருத்துவர் ஆக வேண்டும், பொறியாள ராக வேண்டும், நன்றாக படிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் அவர்கள் நல்ல முறையில் படிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
ஆசிரியர்கள் கண்டிப்பது உங்களுக்காகத்தான். அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் பள்ளிப் படிப்பு கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகு உங்களை யாரும் வழிவகை செய்து வழிகாட்ட இருக்க மாட் டார்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் தங்களுடைய ஒரே குறிக்கோள் 'படிப்பு' என்பதை அறிந்து தெரிந்து அமல்படுத்த வேண்டும்.
முதல்வர் சுகாதாரத் துறை, கல்வித் துறை ஆகிய இரண்டு துறையையும் தன் னுடைய கண்களாக பாவித்து செயல்பட்டு வருகிறார் என்றால் வளர்ந்த நாடுகளில் இந்த இரண்டு துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சி தான் அந்த நாடுகள் வளர உதவி யுள்ளது.
மாணாக்கர்கள் தற் போது உள்ள சூழ்நிலையில் பல்வேறு மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளார்கள். அவர்கள் தற்போது உள்ள தொழில்நுட்பத்திற்கு ஏற்ற வாறு இல்லாமல் தொழில் நுட்பங்களில் சிக்காமல் பள்ளிக்கு வருகை தந்து படிப் பதனால் அவர்களை கை கூப்பி வரவேற்கிறேன்” என்று பேசினார்.

No comments:
Post a Comment