பக்தியால் விளைந்த கேடு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 9, 2022

பக்தியால் விளைந்த கேடு!

குடும்பப் பிரச்சினையைத் தீர்ப்பதாகக் கூறி சிறுமியிடம் கூட்டுப் பாலியல் வன்முறை

மோசடி சாமியார்கள் தலைமறைவு

காளஹஸ்தி, மே 9- மக்களின் பக்தி, அறியாமையைக் கொண்டு அப்பாவி மக்களின் பணத்தை சுரண்டுவது, பெண் களிடம் பாலியல் வன்முறைகளில் ஈடு படுவது என்பது மோசடி சாமியார்களின் தொடர் நடவடிக்கையாக இருந்து வருகிறது.

ஆந்திர மாநிலத்தில் திருப்பதி மாவட்டம் மகாசமுத்திரம்  கிராமத்தில் ராமசுப்பையா (வயது55), பாஸ்கர் (வயது 60) ஆகிய இருவரும் தாங்கள் பூஜை  செய்தால் மக்களின் அனைத்து பிரச்சினைகளும் தீரும் என அப்பகுதி மக்களிடம் கூறி வந்துள்ளனர்.  அவ் விருவரும் அப்பகுதியில் நள்ளிரவு நேரத்தில் பூஜை செய்து வந்துள்ளனர்.

அதே கிராமத்தை சேர்ந்த ஒருவர் குடும்ப பிரச்சினை காரணமாக இவர் களை அணுகியுள்ளார்.  அவரிடம் ராம சுப்பையா, பாஸ்கர் ஆகிய இருவரும் ‘உங்களது 16 வயது மகளை நள்ளிரவு பூஜையில் ஈடுபட வைத்தால் பிரச்சினை அனைத்தும் தீர்ந்துவிடும்’ என தெரிவித்துள்ளனர்.  

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தங்களது மகளை நள்ளிரவு பூஜையில் பங்கேற்க அழைத்து சென்றுள்ளார். அப்போது சாமியார்கள் இருவரும் சிறு மியின் பெற்றோரிடம், இந்த பூஜையில் சிறுமி மட்டுமே பங்கேற்க வேண்டும். நீங்கள் வெளியே சென்றுவிடுங்கள் என்று கூறியுள்ளனர். அதன்பிறகு தங் களிடம் தனியாக சிக்கிக்கொண்ட சிறுமியிடம் பூஜை என்ற பெயரில் பாலியல் வன்முறையைச் செய்துள்ள னர். பின்னர் அந்த  சிறுமியிடம், இங்கு நடந்ததை வெளியே சொன்னால் உனது பெற்றோரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அச்சுறுத்தியுள்ளனர். 

இந்நிலையில், சிறுமி கடந்த 2 நாட்களாக வயிற்று  வலியால் அவதிப் பட்டுள்ளார். இதையறிந்த பெற்றோர் சிறுமியை அங்குள்ள மருத்துவ மனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவர்களின் பரிசோதனையில் சிறுமி 3 மாத கருவுற்றிருப்பது தெரிய வந்தது.  இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், தங்கள் மகளிடம் கேட் டுள்ளனர். அப்போது சாமியார்கள் ராம சுப்பையாவும் பாஸ்கரும் தன்னை 3 மாதங்களாக பாலியல் வன்முறை செய் தனர் எனக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், டக்கலி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் மோசடி சாமியார்கள்மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

குடும்ப பிரச்சினையைத் தீர்ப்பதாக கூறி 16 வயது  சிறுமியை மோசடி சாமி யார்கள் 3 மாதமாக கூட்டு பாலியல் வன் முறை செய்துள்ளனர். தலைமறைவான சாமியார்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மக்களின் அறியாமை, பக்தியைக் கொண்டு மோசடி செய்யும்  சாமியார் களை அடையாளம் கண்டு முன்ன தாகவே அவர்கள் நடவடிக்கைகளைக் கண்காணித்து காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால், இதுபோன்ற அவல நிலை ஏற்பட்டிருக்காது என்று அப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.

No comments:

Post a Comment