இங்கல்ல - கருநாடகத்தில்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 9, 2022

இங்கல்ல - கருநாடகத்தில்!

விசாரணைக்கு வந்த ஹிந்துத்துவ ஆசாமியை - குற்றவாளியை கைகுலுக்கி வரவேற்ற காவல் ஆணையர்

பெங்களூரு, மே 9 விசாரணைக்கு வந்த ஹிந்துத்துவ ஆசாமியான குற்ற வாளியை, காவல்துறை ஆணையர் கைகுலுக்கி வரவேற்ற காட்சி கருநாடக மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

கருநாடகாவில் பிப்ரவரி மாதத்தில் இருந்து ஹிந்துத்துவ அமைப்புகளின் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் தொடர்கதையாகி உள்ளது. 

இந்த நிலையில் ஹனுமன் ஜெயந்தி அன்று மசூதி ஒன்று தாக்கப்பட்டது, பாதுகாப்பிற்கு நின்ற காவல்துறையினரையும் தாக்கினார்கள். இந்தத் தாக்குதலுக்கு ராம்சேனா என்ற ஹிந்துத்துவ கலவர அமைப்பின் தலைவனாகிய பிரமோத் முத்தலிக் என்பவர் காரணமாக இருந்தார். 

 இது தொடர்பாக அவரை மாவட்ட தலைமைக் காவல் ஆணையர் நேரில் ஆஜராக அழைப்பாணை அனுப்பினார். அதன்படி கடந்த வியாழக்கிழமையன்று ஹிமோகா மாவட்ட தலைமைக் காவல் ஆணை யர் அலுவலகத்திற்குச் சென்றார் பிரமோத் முத்தலிக்.

 அப்போது அங்கு வந்த மாவட்ட தலைமைக் காவல் ஆணையர் ஹரிராம் கைகுலுக்கி அவரை வரவேற்றார்.  இதனை பிரமோத் முத்தலிக் தனது சமூகவலை தளத்தில் பதிவிட்டு, ''இன்று விருந்துக்குச் சென்றேன்; மகிழ்ச்சி'' என்று பதிவிட்டுள்ளார். 

 பிமோத் முத்தலிக் மீது ஆட்கடத்தல் தனிநபர் தாக்குதல், மோசடி மற்றும் பெண்களைக் கடத்திய வழக்கோடு, உடுப்பி வனப்பகுதியில் நடந்த ஒரு இஸ்லாமியர் படுகொலையிலும் இவ ருக்குத் தொடர்புள்ளது. 

 இப்படி கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ஒருவரை மாவட்ட காவல்துறை ஆணையரே கைகுலுக்கி வரவேற்ற நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹனுமன் ஜெயந்தி அன்று மசூதியில் நடந்த கலவரம் தொடர்பாக இஸ்லாமியர்கள் பலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்டவர்களிடம் நீதியை எதிர்பார்க்க முடியுமா?

No comments:

Post a Comment