புத்தாக்கம் தந்த தேவகோட்டை புத்தகச் சந்தை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 30, 2022

புத்தாக்கம் தந்த தேவகோட்டை புத்தகச் சந்தை!

தேவகோட்டை,மே30- தேவகோட்டை யில் நடைபெற்ற பெரியார் நகர்வு புத்தகச் சந்தை நிறைவு விழாவில்( 28.05.2022) பெரியார் நகர்வு புத்தக சந்தை பணித் தோழர்களுக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. அன்றைய தினம் காரைக்குடி மாவட்ட தலைவர் ச.அரங்கசாமி அவர்களுக்கு 79 ஆவது பிறந்த நாள் என்பதை அறிந்த தோழர்கள் கேக் வெட்டிக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

நிகழ்வில் மாவட்ட செயலாளர் வைகறை,.மாவட்ட துணைத் தலைவர் கொ.மணிவண்ணன், தேவகோட்டை நகர தலைவர் முருகப்பன், நகர செயலாளர் வழக் குரைஞர் முத்தரசு பாண்டியன்,  மண்டல திராவிட மாணவர் கழக செயலாளர் பிரவீன் முத்துவேல், பேராசிரியர் கண்மணி, பத்திரிகை யாளர் சிவ.தில்லைராஜா, யாழிசை மற்றும் புத்தக சந்தை பொறுப்பா ளர்கள் அர்ஜுன், செந்தில்குமார், சாந்தகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

இரண்டு நாள் புத்தகச் சந்தை யில் புத்தகம் வாங்க வந்த வெற்றி முரசு, செல்வ நாதன், பீட்டர், ஒண்டி வீரன், பெரியசாமி, ஜீவா னந்தம் ஆகிய ஆறு இளைஞர்கள்,   இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment