ஷவர்மாவால் மாணவி இறந்ததைத் தொடர்ந்து கேரளாவில் பரவும் ஷிகெல்லா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 10, 2022

ஷவர்மாவால் மாணவி இறந்ததைத் தொடர்ந்து கேரளாவில் பரவும் ஷிகெல்லா

திருவனந்தபுரம், மே 10 - கேரளாவில்  மீண்டும் ஷிகெல்லா பரவுகிறது. மலப்புரம் மாவட்டத்தில் இந்த நோய்  பாதிக்கப்பட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு உள்ளனர். அசுத்தமான  தண்ணீர் மற்றும் மோசமான உணவுப் பொருட்கள் மூலம் ஷிகெல்லா பாக்டீரியா  பரவுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோழிக் கோட்டில் 6 பேருக்கு  ஷிகெல்லா பரவியது. பின்னர் இந்த நோய் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கடந்த  சில தினங்களுக்கு முன்பு காசர்கோடு அருகே செறுவத்தூர் பகுதியை சேர்ந்த  தேவநந்தா என்ற பிளஸ் 1 மாணவி அங்குள்ள ஒரு பேக்கரியில் சிக்கன் ஷவர்மா  சாப்பிட்டதால் உயிரிழந் தார். உடற்கூராய்வில் அறிக்கையில் மாணவி  சாப்பிட்ட ஷவர்மாவில் ஷிகெல்லா பாக்டீரியா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  இந்த மாணவியுடன் அதே பேக்கரியில் ஷவர்மா சாப்பிட்ட  3 பேருக்கு ஷிகெல்லா  உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் மலப்புரம் மாவட்டம் கொண்டோட்டி  பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவன் உள்பட 3 பேருக்கு ஷிகெல்லா வைரசால் பாதிக்கப்பட்டு  கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு உள்ளனர். அவர்களது  உடல்நிலை திருப்திகரமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். ஷிகெல்லா பரவுவதை  தொடர்ந்து மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர் கோடு ஆகிய மாவட்டங்களில்  சுகாதாரத் துறையினர் பரிசோதனை நடவடிக்கை களை மேற்கொண்டு வருவதாக  அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment