சென்னை, மே 10- தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்து உள்ளதாக காவல் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. கரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான வன் முறைகள் நாடு முழு வதும் அதிகரித்துள்ளது.
இது குறித்து தேசிய மகளிர் ஆணையம் வெளி யிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2021 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 31,000 புகார்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை அதி கரித்துள்ளதாக காவல் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதன்படி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 2019 ஆம் ஆண்டில் 1,982 புகார்களும், 2020 ஆம் ஆண்டில் 2,025 புகார்கள், 2021 ஆம் ஆண்டில் 2,421 புகார்களும் பதிவாகி உள்ளன. 2021 ஆம் ஆண்டில் கணவர் மற்றும் அவரது உற வினர்கள் கொடுமை தொடர்பாக மட்டும் 875 புகார்கள் பதிவாகியுள்ளன.
மேலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்படும் போக்சோ சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண் ணிக்கையும் அதிகரித்துள்ளது. போக்சோவில் 2019 ஆம் ஆண்டு 2,396 வழக்குகளும், 2020 ஆம் ஆண்டு 3,090 வழக்குகளும், 2021 ஆம் ஆண்டு 4,469 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
2021 ஆம் ஆண்டில் பாலியல் வன்முறை தொடர்பாக மட்டும் 3,425 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment