கரோனா மரணத்தின் கொடூரத்தை உலகிற்கு காட்டியவர்களுக்கு புலிட்சர் விருது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 11, 2022

கரோனா மரணத்தின் கொடூரத்தை உலகிற்கு காட்டியவர்களுக்கு புலிட்சர் விருது

புதுடில்லி, மே 11- கரோனா இரண்டாம் அலையின் போது ஒன்றிய அரசின் அலட்சியத்தால் அரைக் கோடி மக்கள் மரண மடைந்தனர். அந்த மர ணத்தின் கோரத்தை பட மெடுத்தவர்களுக்கு புலிட்சர் விருது வழங் கப்பட்டுள்ளது

முதலாம் அலை முடிந்து இரண்டாம் அலை இந் தியாவை பெரிதும் பாதித் துவிட்டது, எள்ளளவும் இரண்டாம் அலையிலி ருந்து மக்களைப் பாது காக்க எந்த ஒரு திட்டமும் இல்லாமல் இருந்த கார ணத்தால் வட இந்தியா முழுவதும் கடுமையான ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவியது 

விளைவு உலக சுகா தார நிறுவன அறிக்கையின் படி இரண்டாம் அலையில் மட்டும் இந்தியாவில் கரோனா மரண எண்ணிக்கை அரைக் கோடியை நெருங்கியது என்று கூறியுள்ளனர்.

ஒன்றிய அரசு இதை மறுத்தபோதும் அன் றைய காலகட்டத்தில் எடுத்த ஒளிப்படங்கள் உண்மையை பகிர்கின் றன. 

மூன்று படங்கள்

ஒன்று உத்தரப்பிரதே சத்தின் பல்வேறு விளை யாட்டு மைதானங்கள் பிணம் எரியூட்டும் இடு காடுகளாக மாறியது, தலை நகர் திரும்பும் பக்கங்கள் எல்லாம் பிணங்கள், குஜ ராத்தில் மருத்துவமனை வாசலில் காத்திருந்த கரோனா நோயாளிகள் அப்படியே பிணமாக விழுந்தனர். 

மத்தியப் பிரதேசத்தில் சாகர் என்ற மாவட்டத் தில் சாலை இருமருங்கி லும் பிணங்கள் எரிக் கப்பட்டன,

எல்லாவற்றையும் விட கங்கைக்கரையில் எண்ணில டங்கா பிணங்கள் புதைக் கப்பட்டன, எரிக்க புதைக்க வசதியில்லாதவர் கள் கங்கையில் பிணத்தை வீசினார்கள். கங்கையில் வீசிய பிணங்களின் எண் ணிக்கை மட்டும் ஆயிரத் தைத் தாண்டும், 

டில்லியில் ஆக்சிஜன் இல்லை என்று மருத்துவ மனைகளில் வெளியே அறிவிப்பு பலகை வைக் கப்பட்டது, அந்த மருத் துவமனைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட நோயாளிகள் பிணமாக விழுந்தனர். 

மிகவும் கொடூரமான காட்சிகள் உலக அரங் கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின, ஆனால் ஆட்சியாளர்களாக இருக்கும் மோடி அண்ட் கம்பெனி என்ன செய்து கொண்டு இருந்தார்கள்.

மோடி மயிலுக்கு உணவு ஊட்டிக்கொண்டு இருந்தார், பாதுகாப்புத் துறை அமைச்சர் தியா னம் செய்துகொண்டு இருந்தார். ஒன்றிய அமைச் சர்கள் வீட்டில் தாயம் விளையாடிகொண்டும், காய்கறி வெட்டிக் கொடுத் துகொண்டும் இருந்தனர். 

கரோனா மரணம் குறித்த கொடூர காட்சி களை படம் எடுத்த அத னான் அபிதி, சன்னா இர் ஷாத் மட்டோ, ஆப்கான் போரில் உயிரிழந்த தானிஸ் சித்திக் போன்றோருக்கு சிறந்த ஒளிப்படக் கலை ஞர்களுக்கான புலிட்சர் விருது வழங்கப்பட்டுள் ளது.

No comments:

Post a Comment