லக்னோ, மே 9- உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ரா நகரில் உள்ள தாஜ்மகாலில் 22 அறை கள் திறக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள் ளன. அவற்றில் இந்துக் கடவுள் சிலைகள் உள்ளனவா? எனத் திறந்து பார்த்து அறிக்கை சமர்ப்பிக்க தொல்லியல் துறை அதிகாரி களுக்கு உத்தரவிட வேண்டும் என அல காபாத் உயர்நீதிமன்றத்தில் பாஜகவினரால் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முகலாயர் ஆட்சிக் காலத் தில் மன்னர் ஷாஜஹானால் கட்டப்பட்டது தாஜ்மகால். இதை அவர் தன் மனைவி மும்தாஜின் நினைவாக 1653 ஆம் ஆண்டில் ஆக்ராவில் கட்டிமுடித்தார்.
தற்போது, பாஜக ஆளும் உத்தரப்பிரதே சத்தில் அமைந்துள்ள தாஜ்மகால், நவீன உல கின் 7 அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படு கிறது.
இந்தியா உள்ளிட்ட பன்னாட்டு நாடு களின் சுற்றுலாப் பயணிகள் அன்றாடம் தாஜ் மகாலைக் கண்டு ரசித்து வருகின்றனர். தாஜ் மகாலின் வலதுபுறம் ஷாயி மசூதியும் கட்டப் பட்டுள்ளது. இதில், தாஜ்மகாலின் வார விடு முறை நாளான வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை நடத்த ஆக்ரா முஸ்லிம்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
ஒன்றிய அரசின் இந்திய தொல்லியல் துறையினரால் (ஏஎஸ்அய்) ஆக்ராவிலுள்ள தாஜ்மகால் உள்ளிட்ட வரலாற்றுச் சின்னங் கள் பராமரிக்கப்படுகின்றன. இதன் பாதுகாப் பின் பொறுப்பு தேசியப் பாதுகாப்பு படை யினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இங் கிருந்த பழைமையான சிவன் கோயிலை இடித்துவிட்டு மன்னர் ஷாஜஹான் இந்த தாஜ்மகாலைக் கட்டியதாகக் கூறப்படுகிறது. இதை பல ஆண்டுகளாக ஹிந்துத்துவா அமைப்புகள் தாஜ்மகால் மீதானப் புகாராக எழுப்பி வருகின்றன.
இந்நிலையில், தாஜ்மகாலுக்குள் சுமார் 22 அறைகள் நிரந்தரமாகப் பூட்டி வைக்கப்பட் டிருப்பதாகத் தெரிகிறது. இவற்றை திறந்து அதில் இந்துக் கடவுள்களின் சிலைகள் மற்றும் கல்வெட்டுப் பதிவுகள் எதுவும் வைக் கப்பட்டுள்ளனவா? எனப் பார்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதை உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவாக அயோத்தியின் செய்தித்தொடர்பாளரான டாக்டர் ரஜ்னீஷ் சிங் தொடுத்துள்ளார். தன் மனுவில், அறை களை திறந்து பார்த்து அறிக்கை சமர்ப்பிக்க தொல்லியல்துறை அதிகாரிகளுக்கு உத்தர விட வேண்டும் என பாஜக தலைவரான ரஜ்னீஷ் கோரியுள்ளார்.
இது குறித்து அயோத்தி பாஜகவின் மூத்த தலைவரான ரஜ்னீஷ்சிங் கூறும்போது, ''கடந்த 2020 முதல் தாஜ்மகாலில் மூடி வைக் கப்பட்டுள்ள அறைகளில் என்ன இருக்கிறது என்பதை அறிய முயற்சி செய்து வருகிறேன். இதன் மீது தகவல் உரிமை சட்டத்தில் ஒன்றிய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறையிடமும் கேட்டிருந்தேன். அதில், பாதுகாப்பு காரணங்களுக்காகப் பூட்டி வைத்திருப்பதாகக் கூறி சமாளிக்கின்றனர். வேறுவழியின்றி உண்மையை வெளி கொண்டுவர இதை வழக்காகத் தொடுத் துள்ளேன்'' எனத் தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக ஹிந்துத்துவா அமைப் பினர் தாஜ்மகாலை, 'தேஜோமகால்' என்றே குறிப்பிடுகின்றனர். இதன் வளாகத்தில் சிவன் சிலை இருப்பதாகக் கூறி அதற்கு பூஜை செய்யவும் பலமுறை முயற்சித்தனர். கடந்த மாதம் 27 ஆம் தேதி கூட, அயோத்தியிலுள்ள ஒரு மடத்தின் தலைவரான துறவி பரம ஹன்ஸ் தாஸ் தாஜ்மகாலுக்கு வந்திருந்தார். உள்ளே இருக்கும் சிவன் கோயிலை தரிசிக்க விரும்புவதாகவும் கூறி இருந்தார்.
எனினும், அவரது கையில் இரும்பாலான பிரம்மதண்டம் இருந்தமையால் துறவிக்கு அனுமதி கிடைக்கவில்லை. பிறகு மீண்டும் மே 4 இல் வந்தவரை ஆக்ரா காவல்துறை யினர் கைது செய்து அரசு விருந்தினர் மாளிகையில் சிறைப்படுத்தினர்.
தற்போது அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அயோத்தி பாஜகவினரால் இந்த மனு தொடுக் கப்பட்டுள்ளது.
பத்மநாபசாமி கோயில் ரகசிய அறைகளில் நீடிக்கும் மர்மம்
திருவனந்தபுரத்தில் பத்மநாபசாமி கோயி லின் கிடைத்துள்ள பழங்கால நகைகள் உள் ளிட்ட பொக்கிஷங்களின் மதிப்பு சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கலாம் எனத் தோராயமாக மதிப்பிடப் பட்டாலும், இன்றைய சந்தை நிலவரப்படி மிகத் துல்லியமாக கணக்கிடப்படாத நிலையே உள்ளது. அந்த அளவுக்கு பொக் கிஷங்கள், திருவனந்தபுரம் கோவில் ரகசிய அறைகளில் மறைத்து வைக்கப்பட்டிருக் கின்றன. 6 ரகசிய அறைகள் இருப்பதாகவும் அதற்குள் தங்க நகைகள் உள்ளிட்ட பொக் கிஷங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக வும் கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக் குகளும் உள்ளன. திருவனந்தபுரத்தில் பத்ம நாபசாமி கோயிலின் பாதாள அறைகளை திறப்பதில் நீதிமன்றம் தலையிட்டும் பாதாள ரகசியங்கள் வெளியாகாமல் தடுக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது. இதுகுறித்தெல்லாம் ஹிந்துத்துவாவாதிகளின் தரப்பில் எந்த முறை யீடுகளும் செய்யப்பட்டிருப்பதாக தகவல் இல்லை.
அயோத்தியில் இரவு நேரத்தில் ராமன் உள்ளிட்ட கடவுளர் சிலைகள் பாபர் மசூ திக்குள் வைக்கப்பட்டு, தொடர்ந்து சர்ச்சை களை உருவாக்கி, கரசேவை பெயரால் ஹிந் துத்துவாவாதிகளால் நடத்தப்பட்ட வன் முறைகளில் அந்த மசூதியே இடித்து தரை மட்டமாக்கப்பட்டது அனைவரும் அறிந் ததே.
மதவாத அடிப்படையில் கலவரத்துக்கு கத்தி தீட்டுவதில் முனைப்பு காட்டி வரும் இந்துத்துவாவாதிகளின் அடுத்த குறி தாஜ்மகால்தானா?
No comments:
Post a Comment